தனது கடந்த கால நினைவுகளை முற்றிலும் இழந்து தற்போது தான் யாரென்றே உணர முடியாத நாயகன் வெற்றி மீது எதிர்பாராதவிதமாக கொலைக்குற்றம் சுமத்தப்படுகிறது. இதனால் போலீஸ் அவரை துரத்த, இன்னொரு புறம் அவரை கொலைவெறியுடன் ஒரு கும்பல் துரத்த…
இந்த இருமுனை துரத்தலும் நாயகன் வெற்றியை மேலும் குழப்ப, உயிர் தப்ப ஓடும் ஓட்டத்தில் எதிரிகளிடம் சிக்கினாரா? போலீசிடம் மாட்டினாரா? பழைய நினைவு திரும்பியதா? என்பதே இந்த ஓட்டமும் நடையுமான ‘மெமரீஸ்.’
மூன்று விதமான கெட்டப்புகளில் நடித்திருக்கும் வெற்றி, உருவத்தில் வித்தியாசத்தை காட்டியிருப்பது போல், நடிப்பிலும் வித்தியாசத்தை காட்டியிருக்கிறார். குறிப்பாக வெற்றி யார்? என்ற பிளாஷ்பேக் போர்ஷனில் தேர்ந்த நடிகனாக தன்னை நிரூபிக்கிறார்.
நாயகியாக வரும் பார்வதி கொடுத்த பாத்திரத்தில் நடிப்பில் நிரம்பி நிற்கிறார். மற்றொரு நாயகியாக வரும் டயானாவும் ஓ.கே.
ரமேஷ் திலக், ஹரீஷ் பெராடி, ஆர்.என்.ஆர்.மனோகர், சாஜில் பாத்திரத்துக்கு பொருத்தமான தேர்வு.
ஒளிப்பதிவாளர்கள் அர்மோ மற்றும் கிரண் நிபிடல் இணையரின் கேமரா, காடு, மலை என அலைந்து காட்சிகளில் மிரட்டியிருக்கிறது.
கவாஸ்கர் அவினாஷின் இசையில் பாடல்கள் ஒ.கே. ரகம். பின்னணி இசையும் அளவு. அழகு.
ஷியாம்-பிரவீன் இயக்கி இருக்கிறார்கள். தெளிவான கதைக்கு திரைக்கதை அமைத்ததில் தடுமாற்றம் தெரிகிறது. ஒரே கதையை பல முறை, பல்வேறு நடிகர்களை வைத்து சொல்லியிருப்பது ஒருகட்டத்தில் நம் மெமரீசை பதம் பார்த்து விடுகிறது. நாயகன் வெற்றி யார்? என்ற கேள்வி தொடக்கம் முதல் முடிவு வரை படத்தை எதிர்பார்க்க வைக்கிறது.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2023/03/2356e9c3c1713253e7436877dab89a46.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2023/03/2356e9c3c1713253e7436877dab89a46-150x150.jpgrcinemaதிரை விமர்சனம்தனது கடந்த கால நினைவுகளை முற்றிலும் இழந்து தற்போது தான் யாரென்றே உணர முடியாத நாயகன் வெற்றி மீது எதிர்பாராதவிதமாக கொலைக்குற்றம் சுமத்தப்படுகிறது. இதனால் போலீஸ் அவரை துரத்த, இன்னொரு புறம் அவரை கொலைவெறியுடன் ஒரு கும்பல் துரத்த... இந்த இருமுனை துரத்தலும் நாயகன் வெற்றியை மேலும் குழப்ப, உயிர் தப்ப ஓடும் ஓட்டத்தில் எதிரிகளிடம் சிக்கினாரா? போலீசிடம் மாட்டினாரா? பழைய நினைவு திரும்பியதா? என்பதே இந்த ஓட்டமும் நடையுமான...