நரிக்குறவரான நாயகன் ஜுனியர் எம்.ஜி.ஆரிடம் ஜெயின் குடும்பத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா தத்தா நட்பாக பழக, ஜுனியர் எம்.ஜி.ஆரோ அதை காதலாக பார்க்கிறார். ஆனால் ஐஸ்வர்யா தத்தாவோ துறவி ஆகும் நோக்கில் ஜெயின் மடத்தில் சேர்ந்து விடுகிறார்.
இந்நிலையில் ஐஸ்வர்யா தத்தா துறவி ஆவதை விரும்பாத ஜுனியர் எம்.ஜி.ஆர். அவரை துறவி மடத்தில் இருந்து கடத்த திட்டமிட…அதன் பிறகு என்ன நடந்தது? அவரது காதல் கைகூடியதா? அல்லது ஏடாகூடமானதா? என்பதே இந்த ‘இரும்பன்’.
நாயகனாக நடித்திருக்கும் ஜுனியர் எம்.ஜி.ஆர். முதல் படத்திலேயே காதல், சென்டிமென்ட், நடனம் காமெடி என எல்லா ஏரியாவிலும் பிரித்து மேய்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா தத்தா தனக்கு கிடைத்த வலுவான கேரக்டரில் ஆச்சரியப்படுத்துகிறார்.
யோகி பாபு வரும் காட்சிகள் சிரிப்புக்கு உத்தரவாதம். இன்னொரு காமெடி நடிகர் சென்ட்ராயனும் சிரிக்க வைக்கிறார்.
வில்லனாக நடித்திருக்கும் ஷாஜி சவுத்ரி, போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள சம்பத்ராம் தங்கள் கேரக்டர்களில் அதிரடி காட்டுகிறார்கள்.
லெனின் பாலாஜியின் கேமரா கடல் மற்றும் கடல் சார்ந்த பகுதிகளை அழகாக படமாக்கியிருக்கிறது.
ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்கள் துள்ளல் ரகம். ‘நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடி…’ பாடலின் ரீமிக்ஸ் திரைஅரங்கையே துள்ள வைக்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் கீரா, நரிக்குறவர்கள் பற்றிய படமாக ஆரம்பித்து அதிரடி படமாக முடித்திருக்கிறார்.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2023/03/1678410918498.jpeghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2023/03/1678410918498-150x150.jpegrcinemaதிரை விமர்சனம்நரிக்குறவரான நாயகன் ஜுனியர் எம்.ஜி.ஆரிடம் ஜெயின் குடும்பத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா தத்தா நட்பாக பழக, ஜுனியர் எம்.ஜி.ஆரோ அதை காதலாக பார்க்கிறார். ஆனால் ஐஸ்வர்யா தத்தாவோ துறவி ஆகும் நோக்கில் ஜெயின் மடத்தில் சேர்ந்து விடுகிறார். இந்நிலையில் ஐஸ்வர்யா தத்தா துறவி ஆவதை விரும்பாத ஜுனியர் எம்.ஜி.ஆர். அவரை துறவி மடத்தில் இருந்து கடத்த திட்டமிட...அதன் பிறகு என்ன நடந்தது? அவரது காதல் கைகூடியதா? அல்லது ஏடாகூடமானதா? என்பதே இந்த...