பூலோகம் படத்தில், அதுவரை சாக்லேட் பாயாக இருந்த ஜெயம் ரவியை ஒரு குத்துச்சண்டை வீரனாக முழுக்க முழுக்க ஆக்ஷனில் பயணிக்க வைத்த கல்யாண்கிருஷ்ணன், இந்தப் படத்தில் ஜெயம் ரவிக்கு கொடுத்திருப்பதோ இன்னொரு முகம். இது முரட்டு முகம். துறைமுகத்தில் அடியாளாக இருந்து எப்படி சமுத்திர ராஜாவாகிறார் என்பது பரபர திரைக்கதை.
இத்தனை முரட்டுத்தனமான ஜெயம் ரவியை இதற்கு முன் நாம் பார்த்ததில்லை. யாருக்கு வேண்டுமானாலும் துரோகம் செய்யும் அளவுக்கு அந்த அகிலன் கேரக்டரை அகிலம் கொண்டாடும் அளவுக்கு செய்திருக்கிறார்.
கடல் கடத்தலில் ராஜாவாக விளங்கும் தருண் அரோராவின் கீழ் இருக்கும் குட்டி தாதாக்களில் ஹரிஷ் பெராடியும் ஒருவர். கப்பல் துறைமுகத்தில் கிரேன் ஆப்பரேட்டராக இருந்தபடி ஹரீஷ் பெராடிக்கும் அவ்வப்போது சில கடத்தல் உதவிகளை ரிஸ்க் எடுத்து செய்து தருகிறார் ஜெயம் ரவி.
ஆனாலும் அவர் ஹரிஷ் பெராடிக்கு விசுவாசமாக இருக்கிறாரா என்றால், அது தான் இல்லை. இதில் விதிவிலக்கு, ஏரியா போலீஸ் அதிகாரியாக வரும் பிரியா பவானி சங்கருருக்கு மட்டும் அடங்குகிறார். நட்பும் காதலுமாய் நேசம் பேசுகிறார்.
அதேநேரம் அவரையும் தனது கடத்தல் தொழிலுக்கு உளவு பார்க்கவே உருவாக்கி இருக்கிறார் என்பது தெரிய வரும் ்இடத்தில் திரைக்கதை இன்னம் சுவாரசியமாகி விடுகிறது.
ப்ளாஷ்பேக்கில் வரும் இன்னொரு ஜெயம்ரவி கேரக்டரை இதற்கு நேரெதிராக உருவாக்கி இருக்கிறார்கள். தீவில் பசியால் வாடும் மக்களுக்கு கப்பலில் உணவு கொண்டு போகும் கேப்டனாக வந்து உடனிருப்பவர்களின் துரோகத்துக்கு பலியாகும் கேரக்டரில் நெகிழ வைக்கிறார்.
குண்டர்களைப் புரட்டி எடுக்கும் இன்ஸ்பெக்டர் பிரியா பவானி சங்கர், ஜெயம்ரவியை அழைத்து வர காவலர்களுக்கு உத்தரவிட, இன்ஸ்பெக்டர் அறைக்குள் நுழைந்த ஜெயம்ரவியை நாலு சாத்து சாத்துவார் என்று தானே நினைப்பீர்கள். மாறாக அங்கு நடப்பது அழகான காதல்.
இன்னொரு நாயகியாக வரும் தன்யா ரவிச்சந்திரனுக்கு வந்து போகிற வேடம்.
போலீஸ் துறையில் ரவிக்கு வில்லனாக வரும் நல்ல காவல் அதிகாரி சிராக் ஜானியும், வில்லத்தனத்தில் தேர்ந்த துறைமுக அதிகாரி ஹரிஷ் உத்தமனும் கடல் சுறாவாய் காட்சிகளில் சிறிப்பாய்கிறார்கள். தொழிலாளர் சங்கத்தலைவர் மதுசூதனன் அந்த மாறுபட்ட கேரக்டரில் சிக்சர் அடிக்கிறார்.
‘கடல் பின்னணியில், கப்பல் பின்னணியில் ஒரு கடத்தல் படம்’ என்ற கற்பனைக்கு உயிர் கொடுத்திருக்கும் இருக்கும் கல்யாண் கிருஷ்ணன், நிச்சயம் இயக்கத்துக்காக பேசப்படுவார். இதுவரை நாம் அறிந்திடாத கடல் பிரதேச காட்சிகள் ,துறைமுகத்தின் பார்த்திராத நடைமுறைகள், பிரம்மாண்டமான சரக்கு கப்பல்கள், அவற்றில் கண்டெய்னர்களை ஏற்றும் உத்திகள், நீள நீள கண்டெய்னர் லாரிகள், அவை சாரி சாரியாக துறைமுகத்துக்குள் வளைந்து நெளிந்து வருவதும் போவதுமான அழகு என்று ஆங்கிலப் பட ரேஞ்சுக்கு காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குனர், அதற்காக அவரோடு இணைந்த ஒளிப்பதிவாளர் விவேக் ஆனந்த் இருவருக்குமே ராயல் சல்யூட்.
தனக்கு துரோகம் இழைத்த காரணத்துக்காக ஜெயம் ரவியை மண்டி போட வைத்து ஹரிஷ் பெராடி விளாசுவதும், அந்த நேரத்திலும் சமுத்திர ராஜா தருண் அரோராவிடம் ஜெயம் ரவி டீல் பேசி ஒரு அசைன்மென்ட் பெறுவதும் தாதாக்கள் உலகம் எத்தகையது என்பதை கோடி காட்டும் மகத்தான இடம்.
துறைமுகத்தில் ஜெயம் ரவி திட்டமிட்டு ஏற்படுத்தும் கண்டெய்னர்களின் டிராபிக் ஜாம் காட்சி திரையில் இதுவரை கண்டிராத இன்னொரு பிரமிப்பு. சாம்.சி.எஸ் இசையில் பின்னணி இசை முன்னணியில் நிற்கிறது.

அகிலன் திரையுலக பிரமிப்பு.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2023/03/images-1-1.jpeghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2023/03/images-1-1-150x150.jpegrcinemaசினிமா செய்திகள்திரை விமர்சனம்பூலோகம் படத்தில், அதுவரை சாக்லேட் பாயாக இருந்த ஜெயம் ரவியை ஒரு குத்துச்சண்டை வீரனாக முழுக்க முழுக்க ஆக்ஷனில் பயணிக்க வைத்த கல்யாண்கிருஷ்ணன், இந்தப் படத்தில் ஜெயம் ரவிக்கு கொடுத்திருப்பதோ இன்னொரு முகம். இது முரட்டு முகம். துறைமுகத்தில் அடியாளாக இருந்து எப்படி சமுத்திர ராஜாவாகிறார் என்பது பரபர திரைக்கதை. இத்தனை முரட்டுத்தனமான ஜெயம் ரவியை இதற்கு முன் நாம் பார்த்ததில்லை. யாருக்கு வேண்டுமானாலும் துரோகம் செய்யும் அளவுக்கு அந்த...