நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள படம் ‘குரங்கு பெடல்’… கடந்த 53-வது கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாராட்டுகளைப் இப்படம் பெற்றது.

சைக்கிள் ஓட்டத்தெரியாத தந்தை.. சைக்கிள் ஓட்ட கற்றுக்கொள்ள ஆசைப்படும் மகன்.. இவர்களுக்கு நடக்கும் ஒரு பாச போராட்டம் தான் இந்த படம்.

குரங்கு பெடல் போட்டு சைக்கிள் கற்றுக்கொள்ள போராடும் சிறுவனும், அவனது நண்பர்களின் பந்தயத்தையும் இந்த படம் சொல்கிறது.

1985ல் கதை…

தந்தைக்கு (காளி வெங்கட் ) சைக்கிள் ஓட்ட தெரியாத காரணத்தினால் அவரை ஊர் மக்கள் அனைவரும் நடராஜா சர்வீஸ் என்று கிண்டல் அடிக்கின்றனர்.. இதனால் இவரது மகன் சந்தோஷ் (மாரி) டென்ஷன் ஆகிறான்.

ஒரு கட்டத்தில் வாடகை சைக்கிள் எடுத்து சைக்கிள் கற்றுக்கொள்ள விரும்புகிறார். ஆனால் தந்தை அதெல்லாம் இப்போது வேண்டாம் என்கிறார். தந்தைக்கு தெரியாமல் வாடகை சைக்கிள் எடுத்துக் கொள்கிறான்.

ஒருநாள் சைக்கிளை சரியான நேரத்தில் கொடுக்க முடியாத காரணத்தினாலும் போதுமான பணம் இல்லாத காரணத்தினாலும் தந்தையிடம் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியே சென்று விடுகிறான்.

அதன் பிறகு என்ன நடந்தது? என்பதுதான் படத்தின் உணர்வுப்பூர்வமான கதை.

காளி வெங்கட், சந்தோஷ் வேலுமுருகன், வி.ஆர்.ராகவன், எம்.ஞானசேகர், பிரசன்னா பாலச்சந்திரன் , ஜென்சன் திவாகர் உட்பட பலர் நடித்துள்ளனர்.

ஒரு கிராமத்து மனிதராகவே வாழ்ந்திருக்கிறார் காளி வெங்கட்.. சைக்கிள் ஓட்ட தெரியாத காரணத்தினால் அவர் படும் வேதனைகளும் மகனிடம் அவர் கேட்கும் பேச்சுகளும் ஒரு தந்தையின் மனநிலையை காட்டுகிறது முக்கியமாக சிறுவர்களாக நடித்துள்ள அனைவரும் கிராமத்து மண்வாசனை மாறாத சிறுவர்களாக வாழ்ந்திருக்கின்றனர்.

தன்னிடம் சைக்கிள் இல்லாத காரணத்தினால் வாடகை சைக்கிள் எடுத்து அந்த கட்டணத்தை அடைக்க முடியாமல் பின்பு அதே கடையில் வேலை பார்த்து கடனை அடைக்கும் ஒரு பொறுப்பான சிறுவனாக மாரி (சந்தோஷ்) வாழ்ந்து இருக்கிறான்.

இவனுடன் நடித்த மற்ற சிறுவர்களும் கலகலப்புக்கும் கதைக்கும் உதவி இருக்கின்றனர்.. அது போல மிலிட்டரி சைக்கிள் கடை வைத்திருக்கும் நபர்.. குடிகாரன் மற்றும் காளி வெங்கட் மனைவி அவர்களின் மகள் என் அனைவரும் நேர்த்தியான பங்களிப்பை கொடுத்திருக்கின்றனர்.

ஒளிப்பதிவு : சுனில் பாஸ்கர்
இசை : ஜிப்ரான்
இயக்கம் : கமலகண்ணன்

எழுத்தாளர் ராசி அழகப்பன் எழுதிய ‘சைக்கிள்’ என்ற சிறுகதையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ், மாண்டேஜ் பிக்சர்ஸ் சார்பில் சவிதா சண்முகம், சுமீ பாஸ்கரன் தயாரித்துள்ளனர். ஜிப்ரான் இசை அமைத்துள்ளார்.

சுனில் பாஸ்கர் என்பவர் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார் மன்மனம் மாறாத காட்சிகளை அழகாக படமாக்கி இருக்கிறார்கள் கிராமத்தில் ஒளியை அழகாகவே படம் எடுத்திருக்கிறார்..

குரங்கு பெடல்.. பாடல் கிராமத்து மண்வாசனை மாறாமல் நம் மனதில் பதிகிறது.. ஜிப்ரான் இசையில் பின்னணி இசை அழகோ அழகு.. சைக்கிள் ஓட்டும் போது சைக்கிள் செயின் அறுந்து விழுவது முதல் அதற்கான சப்தத்தை தன்னுடைய இசையில் அழகாக கோர்த்து இருக்கிறார்.

மதுபான கடை & வட்டம் ஆகிய படங்களை இயக்கிய கமலக்கண்ணன் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.

நாம் ஏழையாக இருந்தாலும் பணக்காரனாக இருந்தாலும் நம் வாழ்க்கையில் எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு பொருள் சைக்கிள்.. அந்த சைக்கிளை ஒரு உணர்வுபூர்வமான ஒரு கேரக்டராக வைத்து படத்தை நகர்த்தி இருப்பது கமலக்கண்ணனின் கலை வண்ணத்தை காட்டுகிறது.

1980 களில் இருந்த கிராமத்து மனிதர்களையும் அவர்கள் வாழ்வியலையும் அழகாக படம் பிடித்து நமக்கு ‘குரங்கு பெடல்’ காவியத்தை கொடுத்திருக்கிறார் கமலக்கண்ணன்.

ஆக இந்த கோடை விடுமுறையில் குழந்தைகளுக்காகவே ஒரு படம் வந்திருக்கிறது.. எனவே குடும்பத்துடன் அனைவரும் பார்த்து ரசிக்கலாம்.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2024/05/68b745cf-4323-4bb0-8800-7be82653030e-1024x521.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2024/05/68b745cf-4323-4bb0-8800-7be82653030e-150x150.jpgrcinemaதிரை விமர்சனம்நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள படம் ‘குரங்கு பெடல்’… கடந்த 53-வது கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாராட்டுகளைப் இப்படம் பெற்றது. சைக்கிள் ஓட்டத்தெரியாத தந்தை.. சைக்கிள் ஓட்ட கற்றுக்கொள்ள ஆசைப்படும் மகன்.. இவர்களுக்கு நடக்கும் ஒரு பாச போராட்டம் தான் இந்த படம். குரங்கு பெடல் போட்டு சைக்கிள் கற்றுக்கொள்ள போராடும் சிறுவனும், அவனது நண்பர்களின் பந்தயத்தையும் இந்த படம் சொல்கிறது. 1985ல் கதை… தந்தைக்கு (காளி வெங்கட் ) சைக்கிள் ஓட்ட...