காசியை சேர்ந்த தீவிர ராமபக்தரான யஷ்பால் சர்மா, தனது மனைவி, மகள், மகன் என குடும்பத்துடன் ராமேஸ்வரம் வருகிறார். மதுரையில் இறங்கி அங்கிருந்து வாடகைக் கார் மூலம் ராமேஸ்வரம் போகும் வழியில் நேர்ந்த எதிர்பாரா விபத்தில் மனைவி இறந்து போகிறார். விமானம் மூலம் உடலை காசிக்கு எடுத்துச் செல்ல முயற்சிக்கும் அவர்களுக்கு சசிகுமார் உதவ முன் வருகிறார்.
இதற்கிடையே, பிரேத பரிசோதனை செய்வது தங்களது கலாசாரத்திற்கு எதிரானது என்று கூறி யஷ்பால் சர்மா தடுக்க, ஆனால், பிரேத பரிசோதனை செய்தால் மட்டுமே உடலை விமானத்தில் எடுத்துச் செல்ல முடியும் என்ற நிலையில், உடல் காசிக்கு பயணப்பட்டதா? இவர்களுக்கு உதவி செய்ய முன்வந்த சசிகுமாரின் முயற்சி என்ன ஆனது? கேள்விகளுக்கான விடை தான் மனிதநேயத்துடன் கூடிய கிளைமாக்ஸ்.
அயோத்தி என்ற தலைப்பை பார்த்தவுடன் ஆன்மீக படமோ என்ற கேள்வி மனதில் எழுவது நிஜம். ஆனால், இந்த ‘அயோத்தி’யோ எந்த வித அரசியலும் பேசாமல் மனிதத்தின் மாண்பு வார்ப்பாக நெஞ்சம் தொடுகிறது.
ஆணாதிக்க மனநிலையோடு வாழும் யஷ்பால் சர்மா அந்த கேரக்டரில் தன்னை ஆழமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
அவரது மகளாக நடித்திருக்கும் ப்ரீத்தி அஸ்ரானி தன் அப்பாவின் அடக்குமுறையை எதிர்க்கவும் முடியாமல் சகிக்கவும் ்முடியாமல் தடுமாறும் நடிப்பில் இயல்பு, இயல்பு..அப்படியொரு இயல்பு. உயிரிழந்த தாயின் உடலை பார்த்து கலங்கும் இடங்களில் நம் கண்களிலும் நீர்கோக்க வைத்து விடுகிறார். இவர் அறிமுக நடிகை என்பது நிஜமாகவே ஆச்சரியம்.
மனிதநேயத்தின் மொத்த வடிவாக வரும் சசிகுமாருக்கு இந்த படம் ஒரு நடிப்பு ஜாக்பாட். யஷ்பால் குடும்பத்தக்கு உதவத் தொடங்கும் இடம் தொடங்கி மனிதர் நடிப்பில் வாழ்ந்திருக்கிறார். இம்மாதிரி கதைகளை தேர்வு செய்யுங்க சசி…ரசிகர்கள் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள்.
யஷ்பால் சர்மாவின் மனைவி ஜானகி வேடத்தில் அஞ்சு அஸ்ரானி கணவனின் கண் பார்வைக்கு கட்டுப்பட்ட பெண்ணாக அடங்கிப் போகும் கேரக்டரில் ‘அக் மார்க்’ நடிப்பு. உயிரிழந்த பிறகும் அவரது நடிப்பு உயிரோட்டம் என்பதை சொல்லியே ஆக வேண்டும்.
காசி முதல் ராமேஸ்வரம் வரை பயணித்துள்ள ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கத்தின் கேமராவும், இசையமைப்பாளர் என்.ஆர்.ரகுநந்தனின் இசையும் இந்த அயோத்திக்கு கிடைத்த சிறப்பு வரம்.
எழுதி இயக்கியிருக்கும் மந்திரமூர்த்தி திரைக்கு புதியவர் என்றாலும், படத்தின் ஆரம்ப காட்சி முதல் இறுதிக் காட்சி வரை மனிதர்களின் உணர்வுகளோடு நம்மை இணைத்ததில் சுலப வெற்றி பெற்று விடுகிறார். மதத்தை கடந்து மனிதர்கள் ஏன் முக்கியமானவர்கள்? ஒருவருக்கொருவர் எந்த பிரதிபலனும் பாராது உதவுவது சமூகத்தில் எத்தனை பெரிய மாற்றங்களை உருவாக்கும் என்பதை காட்சிப்படுத்திய விதத்துக்காகவே ஸ்பெஷல் பாராட்டு.

விருதுகளை குவிக்கும் இ்ந்த அயோத்தி.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2023/03/Fp3dKUTacAE2SGt.jpeghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2023/03/Fp3dKUTacAE2SGt-150x150.jpegrcinemaதிரை விமர்சனம்காசியை சேர்ந்த தீவிர ராமபக்தரான யஷ்பால் சர்மா, தனது மனைவி, மகள், மகன் என குடும்பத்துடன் ராமேஸ்வரம் வருகிறார். மதுரையில் இறங்கி அங்கிருந்து வாடகைக் கார் மூலம் ராமேஸ்வரம் போகும் வழியில் நேர்ந்த எதிர்பாரா விபத்தில் மனைவி இறந்து போகிறார். விமானம் மூலம் உடலை காசிக்கு எடுத்துச் செல்ல முயற்சிக்கும் அவர்களுக்கு சசிகுமார் உதவ முன் வருகிறார். இதற்கிடையே, பிரேத பரிசோதனை செய்வது தங்களது கலாசாரத்திற்கு எதிரானது என்று கூறி...