கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர்கள் சிலம்பரசன், கெளதம் கார்த்திக், கெளதம் மேனன், பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் ‘பத்துதல’ திரைப்படம் மார்ச் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. முன்னதாக இதன் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படத்தின் முதல் பாடலும் திரையிடப்பட்டது.
விழாவில் படத்தின் இயக்குநர் கிருஷ்ணா பேசுகையில், “இந்தப் படம் கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கும் மேல் இருந்தது. அத்தனை காலங்களிலும் அது குறித்து பேசி உயிர்ப்புடன் வைத்திருந்த அனைவருக்கும் நன்றி. படம் நன்றாகவே வந்திருக்கிறது. இது ரீமேக் கிடையாது. தழுவல் தான். 90 சதவீதம் வேறாகவே கொடுத்திருக்கிறேன். இரண்டு மூன்று காட்சிகள் மட்டும் தான் ஒன்றாக இருக்கும்.

சிலம்பரசன் சிறப்பாக நடித்துள்ளார். கெளதம் மேனன், கெளதம் கார்த்திக், ரெடின் கிங்ஸ்லி, கலையரசன், டிஜே அனைவருமே முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தில் நிறைய சர்ப்ரைஸ் எலிமெண்ட்ஸ் இருக்கும். ஏ.ஆர். ரஹ்மான் சிறந்த இசையை கொடுத்துள்ளார். எஸ்.டி.ஆர். படம் என்றாலே வசனம் தான் முக்கியமானது. அது சிறப்பாக வந்துள்ளது. படத்தில் இன்னொரு சர்ப்ரைஸ் உள்ளது. இதில் சாயிஷா ஆர்யா சிறப்பு நடனம் அமைத்திருக்கிறார். படம் ரசிகர்களை கவரும்’’ என்றார்.
தயாரிப்பாளர் ஈஸ்வர் பேசியதாவது, “இந்தப் படத்தை கன்னடத்தில் நான் பார்த்தபோது சிம்பு நடித்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். கடைசியில் அவரே எங்கள் படத்தில் நடித்தது மகிழ்ச்சி. நாம் ஆதரிக்கும் நடிகர்கள், இயக்குநர்கள் என இவர்களைத் தாண்டி சாயிஷா ஆர்யா அவராகவே வந்து எங்களுக்கு நடனம் அமைத்துக் கொடுத்துள்ளது மகிழ்ச்சியான விஷயம். கன்னடத்தில் உள்ள ‘மஃப்டி’ படத்தின் தழுவல் என்றாலும் தமிழுக்கான பல மாற்றங்கள் படத்தை இன்னும் தரமாக்கியுள்ளது. டைரக்டர் கிருஷ்ணாவின் திறமைக்கு இன்னும் பல படங்கள் கிடைக்க வேண்டும்” என்றார்.
நடிகர் கெளதம் கார்த்திக் பேசுகையில், “இந்த படம் நிச்சயம் ‘மஃப்டி’ கன்னடப் படம் போல இருக்காது. எஸ்.டி.ஆருடன் நடித்தது எனக்கு மிகப்பெரிய ப்ளஸ். என் சக நடிகர்கள் அனைவரும் சிறப்பான நடிப்பைக் கொடுத்துள்ளனர். கிருஷ்ணா சார் முதலில் என்னை சந்தித்தபோது, ‘உன் கண்கள் ரொம்ப சாஃப்ட்டாக இருக்கு. உன் கேரக்டருக்கேற்ப அதிகமாய் கோபப்பட பழகிக்கோ’ என்றார். அதை இப்போது வரை செய்து கொண்டிருக்கிறேன். படம் நிச்சயம் வெற்றியடையும்” என்றார்.

rcinemaசினி நிகழ்வுகள்கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர்கள் சிலம்பரசன், கெளதம் கார்த்திக், கெளதம் மேனன், பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் ‘பத்துதல’ திரைப்படம் மார்ச் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. முன்னதாக இதன் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படத்தின் முதல் பாடலும் திரையிடப்பட்டது. விழாவில் படத்தின் இயக்குநர் கிருஷ்ணா பேசுகையில், “இந்தப் படம் கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கும் மேல் இருந்தது. அத்தனை காலங்களிலும் அது குறித்து பேசி உயிர்ப்புடன் வைத்திருந்த...