குமரி மாவட்டத்தில் 2005ஆம் ஆண்டு நடக்கும் கதை இந்த ‘தக்ஸ்.’

நாயகன் ஒரு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் அடைக்கப்படுகிறார். பிறகு அங்குள்ள சிறைவாசிகளுடன் சேர்ந்து சிறையில் இருந்து தப்பிக்க முயற்சி செய்கிறார். திட்டமிட்டபடி தப்பித்தார்களா, அல்லது மாட்டிக் கொண்டார்களா? என்பது பரபர கிளைமாக்ஸ்.

நாயகனாக ஹிருது ஹாரூன். காதலை விட ஆக்ஷன் காட்சிகளில் நடிப்பு கவனம் பெறுகிறது.. குறிப்பாக ஆட்டோவில் ஒருவரை துரத்தி அடிக்கும் காட்சியில் அதிரடி நாயகனாக தடம் பதிக்கிறார்.

எந்தவித முக்கியத்துவமுமில்லாத வெறும் காதல், ரொமான்ஸ், காட்சிகளுக்காக மட்டும் நாயகி அனஸ்வரா ராஜன். வில்லன்களிடம் இருந்து தப்பி ஒடும் இடத்தில் மட்டும் கண்ணில் தெரியும் அந்த உயிர் பயம் நடிப்பில் அவரை கரை சேர்த்து விடுகிறது.
பாபி சிம்ஹா பத்தோடு ஒன்றாக வந்தாலும், நடிப்பில் பத்தில் ஒன்றாக தனித்து தெரிகிறார்.

கறார் ஜெயில் அதிகாரியாக ஆர்.கே.சுரேஷ். கறார் அதிகாரியான அவரை சிறையிலிருப்பவர்கள் அசால்டாக அடிக்கப் பாய்வது நகை முரண்.

வித்தியாசமான கேரக்டர் கிடைத்தால் அதில் சில நட்சத்திரங்கள் ஜொலிப்பார்கள். இந்த படத்தில் அப்படியொரு பாத்திரத்தில் பளபளக்கிறார், முனீஷ்காந்த்.

ஆரம்ப மழை சண்டைக் காட்சியில் பிரயேஷ் குருசாமியின் கேமரா புகுந்து விளையாடி இருக்கிறது. ஆக்–ஷன் படத்துக்கான பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார், சாம்.சி.எஸ்.
மலையாளத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ‘ஸ்வாதந்தர்யம் அர்த்தராத்திரியில்’ படத்தை தமிழில் சிற்சில மாற்றங்களுடன் தழுவி இருக்கிறார், இயக்கிய பிருந்தா. கிளைமாக்ஸ் காட்சியில் கைதிகள் தப்புவார்களா என்பதில் ‘திக்..திக்’கை நெஞ்சில் ஏற்றி தன் இயக்குனர் அடையாளத்தை பதிவு செய்து விடுகிறார்.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2023/02/th.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2023/02/th-150x150.jpgrcinemaதிரை விமர்சனம்குமரி மாவட்டத்தில் 2005ஆம் ஆண்டு நடக்கும் கதை இந்த ‘தக்ஸ்.’ நாயகன் ஒரு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் அடைக்கப்படுகிறார். பிறகு அங்குள்ள சிறைவாசிகளுடன் சேர்ந்து சிறையில் இருந்து தப்பிக்க முயற்சி செய்கிறார். திட்டமிட்டபடி தப்பித்தார்களா, அல்லது மாட்டிக் கொண்டார்களா? என்பது பரபர கிளைமாக்ஸ். நாயகனாக ஹிருது ஹாரூன். காதலை விட ஆக்ஷன் காட்சிகளில் நடிப்பு கவனம் பெறுகிறது.. குறிப்பாக ஆட்டோவில் ஒருவரை துரத்தி அடிக்கும்...