காதலி இல்லாமல் கஷ்டப்படும் சிங்கிள்ஸுக்காக உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு ஸ்மார்ட்போனுக்கு காதல் வந்தால்…
விஞ்ஞானி ஒருவர் மனிதர்களிடையே பேசி, பழகும் பெண்ணை மையப்படுத்திய செயற்கை நுண்ணறிவு கொண்ட ஸ்மார்ட்போன் ஒன்றை உருவாக்கி அதற்கு சிம்ரன் என்ற பெயரும் வைக்கிறார். அந்த போனை சந்தையில் பல கோடிகளுக்கு விற்று பணம் பார்க்க வேண்டும் என தொழிலதிபர் பகவதி பெருமாள் ஆசைப்பட, அதன் மதிப்பு தெரியாத இரண்டு திருடர்கள்அதை திருடிப்போக… ஒருவழியாக அந்த ஸ்மார்ட் போன் உணவு டெலிவரி வேலை பார்க்கும் சிவாவின் கைக்கு வந்து அவரின் வாழ்க்கையை மாற்றியமைக்கிறது.

ஒருகட்டத்தில் ஸ்மார்ட்போன் சிம்ரனுக்கு சிவாவின் மீது காதல் வர, அதை அவர் ஏற்றாரா? மறுத்தாரா? அதனால் ஏற்பட்ட விளைவுகள் என்ன என்பதை கலகலப்புமயமாய் சொல்லியிருக்கிறார்கள்.
முழுக்க முழுக்க காமெடியை மட்டும் நம்பி நகரும் படத்தில், சிவா தனக்கே உரிய விதத்தில் சிரிப்பு சிக்சர் அடித்துக் கொண்டே இருக்கிறார். தனது அப்பா பாடகர் மனோவின் பாதிரியார் வேடம் பார்த்து அவரை சர்ச் பாதர் என நினைத்து, ‘வாங்க பாதர்… என்ன இந்தப் பக்கம்?’ என்று கேட்கிற இடத்தில் அரங்கம் கலகலப்பாகிறது. இடையிடையே அவரின் ஆங்கில வசனங்கள் அடடா ரகம். நாயகி அஞ்சு குரியனிடம் காதலை சொன்னப் போன இடத்தில் டிப்ஸ் கேட்பதெல்லாம் அவருக்கு மட்டுமே வரும்.

செல்போன் சிம்ரனாக மேகா ஆகாஷ். அவர் சிவாவை விரும்பத் தொடங்கிய இடத்தில் இருந்து நம் இதயத்துக்குள் இடம் பெயர்ந்து விடுகிறார். சந்தோஷத்திலும் சோகத்திலும் அந்த முகபாவனைகள் தனிரகம்.

முதலில் காதலுக்கு மறுப்பு, அவரது சாகசம் பார்த்து விருப்பம் என சிவாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் நாயகி வேடத்தில் அஞ்சு குரியன் அழகுப்பதுமையாக கவர்கிறார்.

சிவாவின் அப்பாவாக பாடகர் மனோ, இடைவெளி இல்லாமல் அவர் பங்குக்கு சிரிக்க வைக்கிறார். ‘பர்ஸ்ட் டைம் கிறிஸ்டினா மாறுனதால இதெல்லாம் தேவைன்னு நெனைச்சேம்பா’ என மகனிடம் அவர் பேசும் இடம் காமெடி ரகளை. பார்க்காத காதலிக்காக அவர் தவிக்கும் இடங்களில் அந்த உடல்மொழி வரை நடிப்புப் பாடம் எடுக்கிறது.

காரில் உணவு டெலிவரி செய்வது, அயன் மேனிடம் பஞ்ச் டயலாக் பேசுவது என காட்சிகளை புதிய கோணத்தில் தந்த விதத்தில் இயக்குனர் விக்னேஷ் ஷா புதிய வரவாக ஈர்க்கிறார். குழந்தைகளை கவர வேண்டும் என்பதற்காக கிளைமேக்ஸ் காட்சிகளில் மார்வெல் கதாபாத்திரங்களை கொண்டு வந்ததிலும் சாமர்த்தியம் தெரிகிறது. ‘எந்திரன் சிட்டி’க்கு வந்த காதல் இங்கே ஸ்மார்ட் போன் சிம்ரனுக்கு வருகிறது என்பதில் மட்டும் சற்றே மாற்றம் கொண்டு வந்திருக்கலாம்.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2023/02/single-shankarum-smartphone-simranum-movie-review-655x1024.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2023/02/single-shankarum-smartphone-simranum-movie-review-150x150.jpgrcinemaதிரை விமர்சனம்காதலி இல்லாமல் கஷ்டப்படும் சிங்கிள்ஸுக்காக உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு ஸ்மார்ட்போனுக்கு காதல் வந்தால்... விஞ்ஞானி ஒருவர் மனிதர்களிடையே பேசி, பழகும் பெண்ணை மையப்படுத்திய செயற்கை நுண்ணறிவு கொண்ட ஸ்மார்ட்போன் ஒன்றை உருவாக்கி அதற்கு சிம்ரன் என்ற பெயரும் வைக்கிறார். அந்த போனை சந்தையில் பல கோடிகளுக்கு விற்று பணம் பார்க்க வேண்டும் என தொழிலதிபர் பகவதி பெருமாள் ஆசைப்பட, அதன் மதிப்பு தெரியாத இரண்டு திருடர்கள்அதை திருடிப்போக... ஒருவழியாக அந்த...