அகத்தியர் வழி மரபில் வந்த சித்த மருத்துவர் அகத்தீசன் மேற்குத் தொடர்ச்சி மலையின் வெள்ளிமலை கிராமத்தில் மகளுடன் வசித்து வருகிறார். அங்குள்ள மக்களின் ஆதர்ச வைத்தியர் இவர் தான்.

ஒரு கட்டத்தில் அவரிடம் மருத்துவம் செய்ய மறுக்கும் கிராம மக்கள் அவர் குடும்பத்தையும் புறக்கணிக்கிறார்கள். மனமுடையும் மருத்துவரின் கவலை அதிக நாள் நீடிக்காமல் கிராமத்துக்குள் ஒருவித தோல் அரிப்பு நோய் பரவுகிறது. நோயின் தீவிரத்தால் பலர் உயிரை மாய்த்துக் கொள்ளும் நிலையில், அகத்தீசன் மருத்துவம் வழியே தோல் அரிப்பு நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் குணமானது கிராம மக்களுக்கு தெரிய வர…

அந்த நோயால் பாதிக்கப்பட்ட மொத்த மக்களும் இப்போது அவரைத் தேடி வர… அந்த விபரீத நோயைத் தீர்க்கும் மூலிகைக்காக அவர் கிராமத்தினருடன் மலையேறுகிறார்.

உண்மையில் அந்த நோயைப் போக்கும் மூலிகைக்காகத்தான் அவர் மலையேறுகிறாரா என்பது சஸ்பென்ஸ்.

சித்த மருத்துவர் அகத்தீசனாக சூப்பர் குட் ஆர்.சுப்ரமணியன் தேர்ந்த நடிப்பை வழங்கி இருக்கிறார். அதுவும் மிகையில்லாத நடிப்பு. கிராம மக்கள் தன் மருத்துவத்தை புறக்கணித்த நேரத்தில் மகளுடன் அவர் காட்டும் அந்த ரியாக்–ஷன்கள் ‘விருது ரகம்.’ அவரது மகளாக வரும் அஞ்சு கிருஷ்ணா, மலைப்பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு பாத்திரமாகவே மாறி ஆச்சரியமூட்டுகிறார்.

வீர சுபாஷ் (வனராஜா), கிரிராஜ் (மொரட்டாள்), விஜயகுமார் (புயல்ராசு), சார்லஸ் பாண்டியன் (காட்டுத்தீ), கவிராஜ் (கரும்பாரை), பழனிச்சாமி (பயில்வான்) மலைப்பகுதி மாந்தர்களாகவே மாறித்தெரிகிறார்கள்.
தேனி மாவட்டத்தின் மேக மலையை ஊசி நுழையாத இடத்திலும் ஊடுருவியிருக்கிறது, மணிபெருமாளின் கேமரா. ரகுநந்தனின் இசையில் பாடல்கள் அடிக்கடி வந்தாலும் அத்தனையும் ரசனை. சித்த மருத்துவத்தின் மேன்மையை அழகியலோடு தந்த விதத்தில் ஓம் விஜய், மனதில் பதிகிறார்.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2023/02/veli.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2023/02/veli-150x150.jpgrcinemaதிரை விமர்சனம்அகத்தியர் வழி மரபில் வந்த சித்த மருத்துவர் அகத்தீசன் மேற்குத் தொடர்ச்சி மலையின் வெள்ளிமலை கிராமத்தில் மகளுடன் வசித்து வருகிறார். அங்குள்ள மக்களின் ஆதர்ச வைத்தியர் இவர் தான். ஒரு கட்டத்தில் அவரிடம் மருத்துவம் செய்ய மறுக்கும் கிராம மக்கள் அவர் குடும்பத்தையும் புறக்கணிக்கிறார்கள். மனமுடையும் மருத்துவரின் கவலை அதிக நாள் நீடிக்காமல் கிராமத்துக்குள் ஒருவித தோல் அரிப்பு நோய் பரவுகிறது. நோயின் தீவிரத்தால் பலர் உயிரை மாய்த்துக் கொள்ளும்...