இராமநாதபுர மாவட்ட கிராமம் ஒன்றில் கீழத்தெருவில் வசிக்கும் சந்தோஷ் பிரதாப்பும், மேலத்தெருவில் வசிக்கும் அருள்நிதியும் சிறு வயதில் இருந்தே நண்பர்கள். ஊருக்குள் சாதியை வைத்து அரசியல் செய்ய நினைப்பவர்களுக்கு எதிராக சந்தோஷ் பிரதாப் நிற்க, அவருக்கு துணையாக வருகிறார்,அருள்நிதி.
சாதிபாகுபாட்டுக்கு எதிராக இருந்த உன்னத நட்பு அந்த ஊர் அரசியல்வாதி ராஜசிம்மனை கோபப்படுத்த…இந்நிலையில் திடீரென்று சந்தோஷ் பிரதாப் கொலை செய்யப்பட… அந்த கொலைப் பழி அருள்நிதி மீது விழுகிறது. கொலைப்பழியோடு தலைமறைவாக இருக்கும் அருள்நிதி சந்தோஷ் பிரதாப் கொலைக்கு காரணமானவர்களை என்ன செய்தார்? என்பது பிற்பகுதி கதை.
அருள்நிதியை புதிய கோணத்தில் வெளிப்படுத்தியிருக்கிறான் இந்த மூர்க்கன். பெரிய முறுக்கு மீசையுடன் மூர்க்கன்சாமி என்ற பெயருக்கு நியாயம் சேர்க்கும் வகையில் படம் முழுவதும் அதிரடி நடிப்பில் மிரட்டியிருக்கிறார். சண்டைக் காட்சிகளில் அவர் வெளிப்படுத்தும் மூர்க்கத்தனம் ஒருவகை என்றால், காதல் காட்சிகளில் அவர் வெளிப்படுத்தும் வெள்ளந்தியான நடிப்பு இன்னொரு வகை.
காதலியாக வரும துஷாரா இ்ன்னொரு நடிப்பு ராட்சசி. அருள்நிதிக்கு முத்தம் கொடுத்து அவர் பேசும் காட்சிக்கு நமக்கும் தான் கண்கள் கலங்கிப் போகின்றன.
அருள் நிதியின் உயிர் நண்பன் பூமியாக நடித்துள்ள சந்தோஷ் பிரதாப் தனது கேரக்டருக்கேற்ற சாந்தமான நடிப்பை வெளிப்படுத்துகிறார்.
முனிஷ்காந்த் போலீஸ் ஸ்டேஷனில் அதிகாரத்துக்கு எதிராக வசனம் பேசி நடிக்கும் காட்சிக்கு திரையரங்கம் கரகோஷத்தால் அதிர்கிறது. சைலண்ட் வில்லனாக ‘யார்’ கண்ணன் அமர்க்களம்.
டி.இமானின் இசையில் ‘அவ கண்ண பாத்தா’ பாடல் ரசனை. ஸ்ரீதரின் ஒளிப்பதிவு கதையின் கனத்தை நமக்கும் கடத்தி விடுகிறது.
படத்தின் முக்கிய ஜீவன் சண்டைப்பயிற்சியாளர் கணேஷ்குமாரின் அதீத பங்களிப்பு. அடி ஒண்ணொண்ணும் இடி மாதிரி என்பார்களே, அது படத்தில் தெரிகிறது.
கிராமத்துக் கதை என்றாலே சாதியைத் தூக்கிப்பிடிக்கும் குறியீடுகள், மண் வாசம், அதீத பாசம் என ஊறிப்போன கதைகளையே பார்த்த நமக்கு, காலத்துக்கு ஏற்ற அரசியல் பேச வைத்திருக்கும் இயக்குனர் கவுதம்ராஜின் முனைப்பு பாராட்டத்தக்கது. பூமி கதாபாத்திரம் மூலம் ‘தீண்டாமைக்குள் தீண்டாமை’யாக சமூகத்தில் பின்னியிருக்கும் சாதிய மனோபாவத்தைக் காட்சிப்படுத்தியிருப்பதும் சிறப்பு.
இந்த மூர்க்கன் மிரட்டுகிறான்.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2023/05/1887466-pos-1024x614.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2023/05/1887466-pos-150x150.jpgrcinemaதிரை விமர்சனம்இராமநாதபுர மாவட்ட கிராமம் ஒன்றில் கீழத்தெருவில் வசிக்கும் சந்தோஷ் பிரதாப்பும், மேலத்தெருவில் வசிக்கும் அருள்நிதியும் சிறு வயதில் இருந்தே நண்பர்கள். ஊருக்குள் சாதியை வைத்து அரசியல் செய்ய நினைப்பவர்களுக்கு எதிராக சந்தோஷ் பிரதாப் நிற்க, அவருக்கு துணையாக வருகிறார்,அருள்நிதி. சாதிபாகுபாட்டுக்கு எதிராக இருந்த உன்னத நட்பு அந்த ஊர் அரசியல்வாதி ராஜசிம்மனை கோபப்படுத்த...இந்நிலையில் திடீரென்று சந்தோஷ் பிரதாப் கொலை செய்யப்பட... அந்த கொலைப் பழி அருள்நிதி மீது விழுகிறது. கொலைப்பழியோடு...