கன்னி திரைப்பட விமர்சனம் 3.25/5..
மாயோன் சிவா இயக்கத்தில் அஸ்வினி சந்திரசேகர், மணிமாறன், தாரா க்ரிஷ், ராம் பரதன் நடிக்க உருவாகியிருக்கும் படம் ‘கன்னி’.
ஒளிப்பதிவு – ராஜ்குமார்
இசை – செபாஸ்டியன் சதீஷ்.
சன் லைஃப் கிரியேஷன்ஸ் சார்பில் எம் செல்வராஜ் தயாரித்திருக்கிறார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு மலை கிராம கதையை மையப்படுத்தி படத்தையே கொடுத்து இருக்கிறார் இயக்குனர் மாயோன் சிவா.
படத்தின் ஆரம்பத்திலேயே நாயகி அஸ்வினி சந்திரசேகர் தனது அண்ணன் மகள்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு ஒரு காட்டு வழி பகுதியாக பதுங்கி செல்கிறார். அங்கு சென்ற பின் சிலர் உதவியுடன் ஒரு இடத்திற்கு செல்கிறார்.
அங்கு இவரை தேடி வில்லன் கும்பல் வருகிறது.. அஸ்வினிடம் இருக்கும் ஒரு தெய்வீகமான ஓலைச்சுவடியை அபகரிக்க திட்டமிட்டு வருகின்றனர். அதை மறைத்து அவர்களிடம் இருந்து காப்பாற்ற முயல்கிறார் நாயகி அஸ்வினி.
அப்படி என்னதான் அந்த ஓலைச்சுவடியில் இருக்கிறது.? வில்லன் கோஷ்டி அதை அபகரிக்க திட்டம் போடுவது நோக்கம் என்ன? அஸ்வினி அதை தர மறுப்பது நோக்கம் என்ன? என்பதுதான் இந்த ‘கன்னி’ படத்தின் கதை.
மகள் செம்பியாக அஸ்வினி சந்திரசேகர்,
மாதம்மா வேல்முருகன் செங்கா, அவருடைய மகன் வேடனாக மணிமாறன் ராமசாமி, மருமகள் நீலிமாவாக தாரா க்ரிஷ், மச்சனாக ராம் பரதன், மாயம்மாவாக சரிகா செல்வராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.
நாயகி அஸ்வினி ஒட்டுமொத்த படத்தையும் தாங்கி நிற்கிறார்.. கதை நாயகியாக ஒரு மலை கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் தோன்றியிருக்கிறார்.
மேலும் ஆக்ஷனிலும் அசத்தியிருக்கிறார்.. சென்டிமென்டிலும் சென்டிமீட்டர் அளவு நடிப்பை கொடுத்திருக்கிறார்.
இவரின் அம்மா அண்ணா அண்ணி அனைவரும் படத்தின் கதை ஓட்டத்திற்கும் கேரக்டருக்கும் ஏற்ப பயணித்திருப்பது சிறப்பு.
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்த படத்திற்கு சென்றால் நிச்சயம் இந்த கன்னி உங்களை கவர்வாள்.
நல்ல ஒளிப்பதிவு நேர்த்தியான இசை என அனைத்தும் கவர்கிறது.. செபாஸ்டியன் சதீஷின் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு பலம்..
ராஜ்குமார் பெரியசாமியின் ஒளிப்பதிவில், காடுகள் மலை கிராம பகுதி மக்கள் அங்கு வசிக்கும் வீடுகள் என அனைத்தும் ரசிக்க வைக்கிறது..
தெய்வீக ஓலைச்சுவடி சித்த மருத்துவம் என வித்தியாசமாக சிந்தித்து இருக்கிறார் இயக்குனர்.. அதே சமயம் மருத்துவ உலகமும் மருத்துவம் மாஃபியாவும் சித்த மருத்துவத்தை அழிக்கவும் அதனை வைத்து ஆதாயம் தேடவும் நடக்கும் அரசியலும் படத்தில் திரைக்கதையாக காட்டப்பட்டிருக்கிறது.
இப்படியாக இருக்கும் சூழ்நிலையில் அதே மலை கிராமத்தில் ஒரு மனநிலை பாதிக்கப்பட்டு பெண்ணுக்கு மட்டும் வைத்தியம் பார்க்க முடியவில்லை என்ற கேள்வி எழுகிறது.. அவரையும் அடிக்கடி திரையில் காட்டிக் கொண்டிருப்பது ஏனோ.?
