திரை விமர்சனம்

Rasavathi ரசவாதி விமர்சனம் 3.75/5

சித்த மருத்துவர் சதாசிவ பாண்டியன் (அர்ஜுன் தாஸ்) இவர் இயற்கை ஆர்வலரும் கூட.. சரக்கு அடித்து விட்டு பாட்டில்களை சிலர் காட்டில் வீசி செல்லும்போது இதனால் யானை உள்ளிட்ட மிருகங்கள் பாதிக்கப்படும் என அட்வைஸ் செய்யும் நல்ல மனிதர் இவர்.

ஒரு கட்டத்தில் அங்கு உள்ள பிரபல ஹோட்டலில் மேலாளராக பணிபுரிய வருகிறார் நாயகி தன்யா ரவிச்சந்திரன்.. அதே சமயத்தில் அந்த ஊருக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆக வருகிறார் வில்லன் சுஜித் சங்கர்.

அர்ஜுன் & தன்யாவும் நெருங்கி பழக இது பிடிக்காமல் அவர்களைப் பிரிக்க நினைக்கிறார் வில்லன் சுஜித்.

தான் உண்டு தன் வேலை உண்டு என இருக்கும் நாயகனை வில்லன் குறி வைப்பது ஏன்? அவரது நோக்கம் என்ன?

ஒரு கட்டத்தில் தன்யாவிடமும் அர்ஜுன் தாஸ் பற்றி அதிர்ச்சியான தகவல்களை சொல்கிறார்.. அப்படி என்றால் அர்ஜுன் தாஸ் யார்? அவருக்கும் வில்லன் சுஜித்துக்கும் தொடர்பு என்ன என்பதுதான் படத்தின் மீதி கதை.

அர்ஜூன் தாஸ் – சதாசிவ பாண்டியன்
தன்யா ரவிச்சந்திரன்-  சூர்யா
சுஜித் சங்கர்- பரசு ராஜ்
ரேஷ்மா வெங்கடேஷ்-சந்திரா

பல படங்களில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ் இதில் அலட்டல் இல்லாத நாயகனாக தன் கேரக்டரை உணர்ந்து நடித்திருக்கிறார்.. கரடு முரடான குரல் கள்ளக் கபடமில்லாத உள்ளம் என சித்த மருத்துவர் கேரக்டருக்கு உயிர் கொடுத்திருக்கிறார்..

முதல் நாயகி தன்யா ரவிச்சந்திரனுக்கு பெரிதாக வேலை இல்லை என்றாலும் கொடுத்த பாத்திரத்தில் நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிறார்..

மலையாள நடிகர் வில்லன் சுஜித் ஷங்கர் படத்தை தாங்கி நிற்கிறார். படம் முழுக்க சீரியஸாக காணப்பட்டாலும் இவரது வசனங்கள் நம்மை சிரிக்க வைக்கிறது.. இவரது வில்லத்தனம் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த புதுவரவு..

சந்திரா கேரக்டரில் கலகலப்பான பெண்ணாகவும் அடக்கமான மனைவியாகவும் ஸ்கோர் செய்து விட்டார் இரண்டாவது நாயகி ரேஷ்மா..

ஜி.எம். சுந்தர்- முருகானந்தம்
ரிஷிகாந்த் – இளங்கோ
ரம்யா சுப்ரமணியன் -Dr. சைலஜா உள்ளிட்டோர் கேரக்டர்கள் படத்தின் கதை ஓட்டத்திற்கு பெரிய உதவியாக இருந்திருக்கிறது.. ரசிக்கும் வகையிலான நடிப்பை கொடுத்திருக்கின்றனர்..

Writer & Director – Santhakumar
Producer – Santhakumar
Banner – DNA Mechanic Company
Co Producer – Saraswathi Cine Creation
Dop – Saravanan Ilavarasu
Music – Thaman S
Lyricist – Yugabharathi
Editor – V.J. Sabu Joseph
Art Director – Sivaraj Samaran
Stunt Master – Action Prakash
Dance Choreographer –  Sathish Krishnan
Makeup – Vinoth sukumaran
Costumer – Perumal Selvam
Costume Designer – Minuchitrangkani.J

தமன் இசை அமைத்திருக்கிறார்.. பாடல்கள் ஓகே ரகம் தான்.. ஆனால் பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார்.. ஒரு திரில்லர் கதைக்கு ஏற்ப இசை கொடுத்து நம்மை அடுத்தது என்ன நடக்கும்? என யூகிக்க முடியாமல் ரசிக்க வைத்திருக்கிறார்..

சரவணன் இளவரசு ஒளிப்பதிவில் கொடைக்கானல் அழகு கோடை காலத்திற்கு தேவையான குளிர்ச்சி தருகிறது.. படத்தொகுப்பாளர் சாபுஜசப் தன் பணியை மிகவும் கவனத்துடன் கையாண்டு உள்ளார்.

மௌனகுரு மற்றும் மகாமுனி ஆகிய படங்களை இயக்கிய சாந்தகுமார் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.. மேலும் தன் படைப்பு சுதந்திரம் என்பதற்காக அவரை தயாரித்தும் இருக்கிறார்.

சாந்தகுமாரின் படங்கள் பெரும்பாலும் நிதானமாகவே செல்லும்.. இந்த ரசவாதியும் அதற்கு விதிவிலக்கல்ல.. ஆனால் ரசவாதி என்ற வார்த்தை மிகவும் அரிதான வார்த்தை.. அதற்கான விளக்கம் போதுமான அளவில் இல்லை..

திரைக்கதை அதற்கு ஏற்ப நடிகர்கள் என தனது இயக்க பணிய சிறப்பாகவே செய்திருக்கிறார் இயக்குனர் சாந்தகுமார்.

வர்மக்கலை சித்த மருத்துவம் இயற்கை ஆர்வலர் என சமூகத்திற்கான எண்ணம் கொண்டவராக நாயகனை உருவகப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் சாந்தகுமார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *