அழகு என்றாலே ஆபத்து என்று நினைக்கும் நாயகன் ரிஷிக்கு அழகான பெண்களை பார்த்தாலே அப்படியொரு வெறுப்பு. இதற்கு அடித்தளம் அவரது தந்தை தான். ஊனமுற்ற அல்லது மற்றவர்கள் திருமணம் செய்துகொள்ள மறுக்கும் பெண்ணை திருமணம் செய்துகொள் என்று மகன் மனதில் ஒரு விபரீத சிந்தனையை ஏற்படுத்தி விடுகிறார், அந்த தந்தை.
இதற்கிடையே தீ விபத்தில் முகம் பாதிக்கப்பட்ட நாயகி கரீனா ஷாவை பார்த்ததும் அவர் மீது காதல் கொள்கிறார், ரிஷி. தன் தந்தை சொன்னது போன்ற ஒரு பெண் கிடைத்து விட்ட அவரது சந்தோஷம் அதிக நாள் நீடிக்கவில்லை. பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் தனது முகத்தை பழையபடி அழகாக்கி விடுகிறார், நாயகி.
இதனால் பழையபடி நாயகியின் அழகான முகத்தை அலங்கோலமாக்கி அதன் பிறகு அவரை திருமணம் செய்ய முடிவு செய்கிறார், ரிஷி. அவரது இந்த விபரீதமான முயற்சியால் என்ன நடந்தது? என்பது மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் ரிஷி, தந்தை-மகன் என இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். அப்பா கதாபாத்திரத்தை விட மகன் கதாபாத்திரத்தில் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி தனது கேரக்டருக்கு நியாயம் சேர்க்கிறார்.
நாயகியாக வரும் கரீனா ஷா, கதைக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில்பிரகாசிக்கிறார்.

சிங்கமுத்து, காயா கபூர், ஆதேஷ் பாலா கொடுத்்த கேரக்டர்களில் நிறைவு.

படத்தை தயாரித்திருக்கும் ஆர்.தீபக் குமாரே ஒளிப்பதிவும் செய்திருக்கிறார்.

இலக்கியனின் இசையில், இறையன்பு, தமிழ்முருகன் வரிகளில் பாடல்கள் இனிமை.

எழுதி இயக்கியிருக்கும் கோ.ஆனந்த் சிவா, கமர்ஷியல் கதைக்குள் நல்ல மெசேஜையும் இணைத்து சொன்ன விதத்தில் கவனம் பெறுகிறார். அழகான பெண்கள் தவறானவர்கள் இல்லை என்பதையும் சொன்ன விதத்தில் இயக்கத்துக்கு பியூட்டி சேர்க்கிறார்.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2023/03/3-1.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2023/03/3-1-150x150.jpgrcinemaதிரை விமர்சனம்அழகு என்றாலே ஆபத்து என்று நினைக்கும் நாயகன் ரிஷிக்கு அழகான பெண்களை பார்த்தாலே அப்படியொரு வெறுப்பு. இதற்கு அடித்தளம் அவரது தந்தை தான். ஊனமுற்ற அல்லது மற்றவர்கள் திருமணம் செய்துகொள்ள மறுக்கும் பெண்ணை திருமணம் செய்துகொள் என்று மகன் மனதில் ஒரு விபரீத சிந்தனையை ஏற்படுத்தி விடுகிறார், அந்த தந்தை. இதற்கிடையே தீ விபத்தில் முகம் பாதிக்கப்பட்ட நாயகி கரீனா ஷாவை பார்த்ததும் அவர் மீது காதல் கொள்கிறார், ரிஷி....