தமிழகத்தில் நடந்த ஆணவக் கொலைகள் பற்றி டாக்குமெண்டரி படம் எடுப்பதற்காக அமெரிக்காவில் இருந்து வரும் நிருபர் சிந்தியாவுக்கு ஆட்டோ ஓட்டுநரான ராமகிருஷ்ணனும், வைஷ்ணவி ராஜும் உதவி செய்கிறார்கள். தமிழகத்தில் நடந்த பல்வேறு ஆணவக் கொலைகள் மற்றும் அதன் பின்னணி குறித்து விசாரித்து, சம்பந்தப்பட்டவர்களை நேர்காணலும் செய்கிறார்கள்.
இதற்கிடையே, காதல் ஜோடி ஒன்று சிந்தியா குழுவினரிடம் தஞ்சம் அடைய, அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கிறார்கள். ஆனால், காதல் ஜோடியின் பெற்றோர் கொலை வெறியுடன் துரத்த, அவர்களிடம் இருந்து காதல் ஜோடி தப்பித்ததா? இல்லையா?, ஆணவக் கொலைகள் பற்றி சிந்தியா டாக்குமெண்டரி படம் எடுத்தாரா? இல்லையா? என்பது திகுதிகு திரைக்களம்.
தன் மகளை காதலித்தவனை ரவுடிகளை ஏவி கொல்லும் ஒரு தந்தை, அவர்களை பழிவாங்கும் மகள், கீழ்சாதி வாலிபனை காதலிக்கும் மேல்சாதிப் பெண்ணை அந்த ஊர் அடாவடி பேர்விழி பலாத்காரம் செய்வது என அனலும் திகிலுமான காட்சிகள் நெஞ்சில் கனம் ஏற்றி விடுகின்றன.
தனது சாதி சனத்தை எதிர்த்து தங்கையின் காதலுக்கு ஆதரவாக நிற்கும் அந்த அண்ணன் கேரக்டர் படத்தை உயர்த்திப் பிடிக்கிறது. இதே அண்ணனை மீறி சாதி சங்கத் தலைவன் அவன் தங்கையை கொல்லும் கொடூரம் சமூக அவலத்தின் உச்சம்.
படத்தில் நடித்திருக்கும் அநேகர் புதுமுகம் என்றாலும் படத்தில் இயல்பாக நடித்து ஆச்சரியப்படுத்துகிறார்கள். குறிப்பாக அமெரிக்க சிந்தியா சாதிவெறி உருவாக்கும் ஆணவக்கொலைகளை பற்றி அறிந்து மனம் வெதும்பும் இடத்தில் மனசில் பதிகிறார். அய்யர் வேடத்தில் வரும் ‘கவிதாலயா’ மோகன் தனது கணீர் குரலால் ஆசாரங்களுக்கு முரணாக நடக்கும் தங்கை மகளை கண்டிக்கும் காட்சியில் தேர்ந்த நடிகராக கவனம் ஈர்க்கிறார். சினிமாவுக்கு ஒரு நல்ல குணசித்ர நடிகர் கிடைச்சாச்சு. ஆட்டோ டிரைவராக வரும் ராமகிருஷ்ணன், தான் கல்வி பயிலாததற்கு சொல்லும் காரணமும், அதற்கான வசனமும் நச்.
தீபன் சக்ரவர்த்தி இசையில் பறையிசை நிஜமாகவே பிரமிப்பு. இயக்கிய ஆணவக் கொலைகளை காட்சிப்படுத்தி அதற்கான தீர்வை நம்மிடமே விட்டு விடும் இடத்தில் சுகுமார் அழகர்சாமியின் இயக்கம் நிமிர்ந்து நிற்கிறது.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2023/02/Untitled-1024x650.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2023/02/Untitled-150x150.jpgrcinemaதிரை விமர்சனம்தமிழகத்தில் நடந்த ஆணவக் கொலைகள் பற்றி டாக்குமெண்டரி படம் எடுப்பதற்காக அமெரிக்காவில் இருந்து வரும் நிருபர் சிந்தியாவுக்கு ஆட்டோ ஓட்டுநரான ராமகிருஷ்ணனும், வைஷ்ணவி ராஜும் உதவி செய்கிறார்கள். தமிழகத்தில் நடந்த பல்வேறு ஆணவக் கொலைகள் மற்றும் அதன் பின்னணி குறித்து விசாரித்து, சம்பந்தப்பட்டவர்களை நேர்காணலும் செய்கிறார்கள். இதற்கிடையே, காதல் ஜோடி ஒன்று சிந்தியா குழுவினரிடம் தஞ்சம் அடைய, அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கிறார்கள். ஆனால், காதல் ஜோடியின் பெற்றோர் கொலை வெறியுடன்...