1994-ல் ஹாலிவுட்டில் வெளிவந்து ஹிட்டடித்த ‘பாரஸ்ட் கம்ப்’ படமே இந்தியாவுக்கேற்ற மாற்றங்களுடன் திரை மொழி பேசுகிறது. எந்த ஒரு விஷயத்தையும் மெதுவாக புரிந்து கொள்ளும் தன்மை கொண்ட அமீர்கானுக்கு நடக்க வரவில்லை. ஆனால் மருத்துவரோ, ‘காலில் பிரச்சினை இல்லை. பிரச்சினையே அவருடைய மூளையில் தான்’ என்கிறார். ஆனால், அவருடைய அம்மாவோ ‘உனக்கு எந்த பிரச்சனையும் இல்லை, நீயும் மற்றவர்கள் போல நன்றாகவே இருக்கிறாய்’ என்று அவருக்கு உற்சாகம் அளிக்கிறார்.

பள்ளியில் சேரும் லால் சிங்கிற்கு அம்மாவை போலவே பாசம் காட்ட தோழி கரீனாகபூர் கிடைக்கிறார்.
கரீனாகபூரை தனது அம்மாவிற்கு அடுத்த இடத்தில் வைத்திருக்கும் அமீர்கான், அவர் மீது காதல் கொள்ள, அவரோ மாடலிங், சினிமா என இன்னொரு உலகம் பக்கம் நகர்கிறார். ஒரு கட்டத்தில் அமீர்கானை கரீனாகபூர் பிரிந்து தொலைதூரம் சென்று விட, ராணுவத்தில் சேரும் அமீர்கானை காலம் தொழிலதிபராக உயர்த்தி வைக்கிறது. அவர் மீண்டும் கரினாகபூருடன் சேர்ந்தாரா இல்லையா என்பது படத்தின் மீதிக்கதை.

இந்த கதை நடக்கும் கால கட்டத்துக்கேற்ப படத்தில் இந்திரா காந்தி மரணம், பாபர் மசூதி இடிப்பு, கார்கில் போர், அன்னா ஹசாரே உண்ணாவிரதம் என அப்போதைய அரசியல் முக்கிய நிகழ்வுகளை இணைத்தது கதையோடு நம்மை சுலபத்தில் ஐக்கியப்படுத்தி விடுகிறது.
லால் சிங் தத்தாவாக அமீர்கான். காதலி தன்னை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகிச் செல்வதை உணர்ந்தாலும் தொடர்ந்து அவர் மீது அன்பு காட்டுவதும், ஒவ்வொரு முறையும் என்னை கல்யாணம் செய்துக்கிறியா? என்று கேட்பதுமாய் அன்பே வடிவான அந்த காதலனை நம் கண்முன் நிறுத்துகிறார். ராணுவத்தில் தனக்கு நண்பனாக கிடைத்த நாகசைதன்யாவிடம் காட்டும் அன்பு நிஜமாகவே இன்னொரு உலகம்.

மாடலிங் செய்து, பாலிவுட் நடிகையாக வர வேண்டும் என்று ஆசைப்படும் கரீனாகபூர் தனது சிறுவயது முதலான நண்பன் லாலை தவிர்க்க முடியாமல் அதேநேரம் தன் கனவையும் நிறைவேற்ற போராடும் இடங்களில் தேர்ந்த நடிகையாக தன்னை இனம் காட்டி விடுகிறார்.
அமீர் கானின் ராணுவ நண்பராக வரும் நாக சைதன்யாவின் தோற்றமும் நடிப்பும் அழகு. அமீர்கானின் அம்மாவாக மோனா சிங், கதையின் இன்னொரு தன்னம்பிக்கை முனை.

கெளரவ தோற்றத்தில் வரும் ஷாருக்கான் நிஜமாகவே இன்ப அதிர்ச்சி தருகிறார்.

அதுல் குல்கர்னியின் கதைக்கு அத்வைத் சந்தன் திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார். ஒரு மனிதனின் வாழ்க்கையில் நடக்கும் அதிசயங்களை மிக சாதாரணமாக விவரிப்பதோடு, அந்த மனிதனையும் போகப்போக நமக்கு பிடித்தவனாக மாற்றி விடுகிறார். ரெயிலில் லால் தன் கதையை தானே சொல்ல ஆரம்பிக்கும் இடம் தொடங்கி முடிவு வரையிலான சீரான திரைக்கதை படத்தின் சின்னச் சின்ன குறைகளை மறைத்து நெஞ்சம் நிறைத்து விடுகிறது.

லால், ‘வாவ்…’

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2022/08/Untitled-1.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2022/08/Untitled-1-150x150.jpgrcinemaதிரை விமர்சனம்1994-ல் ஹாலிவுட்டில் வெளிவந்து ஹிட்டடித்த ‘பாரஸ்ட் கம்ப்' படமே இந்தியாவுக்கேற்ற மாற்றங்களுடன் திரை மொழி பேசுகிறது. எந்த ஒரு விஷயத்தையும் மெதுவாக புரிந்து கொள்ளும் தன்மை கொண்ட அமீர்கானுக்கு நடக்க வரவில்லை. ஆனால் மருத்துவரோ, ‘காலில் பிரச்சினை இல்லை. பிரச்சினையே அவருடைய மூளையில் தான்’ என்கிறார். ஆனால், அவருடைய அம்மாவோ ‘உனக்கு எந்த பிரச்சனையும் இல்லை, நீயும் மற்றவர்கள் போல நன்றாகவே இருக்கிறாய்’ என்று அவருக்கு உற்சாகம் அளிக்கிறார். பள்ளியில்...