ஒரு தந்தைக்கும் மகளுக்குமான பாசப்பிணைப்பை உணர்த்தும் படம். இந்த பாசமே தந்தைக்கு சோதனையாகவும் ்மகளுக்கு வேதனையாகவும் மாறினால்…
ஒரு எளிமையான குடும்பத்தில் பிறந்து சென்னையில் மனைவி வெலினா, மகள் பிரதிக்–ஷாவுடன் வாடகை வீட்டில் குடி இருப்பவர் முருகதாஸ்.
செல்போன் சர்வீஸ் கடை நடத்தி வரும் முருகதாஸ், அதில் வரும் வருமானத்தைக் கொண்டு தன் குடும்பத் தேவைகளை சமாளித்து வருகிறார். மகள் மீது அளவில்லா பாசம் வைத்திருக்கும் அவர், தன் மகள் எதைக் கேட்டாலும் இல்லையென்பதே இல்லை. அது என்ன விலையென்றாலும் உடனே வாங்கித் தந்து விடுகிறார்.
இந்நிலையில் தன்னுடன் படிக்கும் கோடீசுவர சக மாணவன் ஒருவனின் பங்களாவைப் பார்த்ததும் தனக்கும் இப்படி ஒரு பங்களா வேண்டும் என்று தனது அப்பாவிடம் கேட்கிறாள் மகள்.
தனது மகள் எதைக் கேட்டாலும் இல்லையென்னாத அந்த அப்பா, மகள் கேட்ட பங்களா வீட்டையும் வாங்கித் தருவதாக கூற…

இதனால், சில நாட்களில் பங்களாவிற்கு சென்று விடுவோம் என்ற கனவில் இருக்கும் மகளின்
கனவு நிறைவேறியதா.? மகள் கேட்டதையெல்லாம் கணக்கு பாராமல் வாங்கித் தந்த அப்பா பங்களா விஷயத்தில் என்ன முடிவெடுக்கிறார் என்பது மீதிக் கதை.
ஆடுகளம், குட்டிப்புலி என பல படங்களில் நடிப்பு முத்திரை பதித்த முருகதாஸ், இப்படத்திலும் மகள் பாசத்தில் பொங்கி வழியும் ஒரு அப்பாவாக அசத்துகிறார்.
மகள் மீது அளவு கடந்த பாசத்தை காட்டும் அப்பா இப்படித்தான் இருப்பார் என்பதை வெளிப்படுத்தும் எல்லா இடங்களிலுமே நடிப்பில் சிக்சர்அடித்துக் கொண்டே இருக்கிறார். மகளின் ஆசையை நிறைவேற்ற முடியாத அந்த கையாலாகாத அப்பாவின் நிலையை அவர் வெளிப்படுத்தும் இடம் கண்கள் குளமாகிறது.
மகளை ஓடிச் சென்று அணைக்க முடியாமல் மரத்திற்கு பின்னால் நின்று கொண்டு கண்ணீர் சிந்தும் காட்சியில், அப்பப்பா நடிப்பு சூப்பரப்பா. விருது நிச்சயமப்பா.
மகளாக வரும் பிரதிக்‌ஷா பாசமிகு மகளை இலக்கணம் மாறாமல் கண்முன் நிறுத்தியிருக்கிறார். பங்களாக்கனவை அவர் அப்பாவிடம் விவரிக்கும் இடத்தில் தான் நடிப்பில் எத்தனை அழகு…
தனது நண்பர்களுடன் சேர்ந்து இருக்கும் காட்சியில், காட்டும் முக பாவனைகள் கொஞ்சும் மழலையாக காட்சிக்கு அழகு சேர்த்திருக்கிறார் ப்ரதிக்‌ஷா.

ப்ரதிக்‌ஷாவின் பள்ளி நண்பனாக நடித்திருக்கும் அந்த சிறுவனும் க்யூட்.

கன்னிமாடம் படத்தில் அனைவரின் பாராட்டைப் பெற்ற நாயகி வெலினா, இப்படத்திலும் ஒரு குடும்பப் பெண்ணாக வந்து தனது கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கிறார். கணவனின் மிதமிஞ்சிய மகள் பாசத்தை உணர்ந்து அவர் தவிக்கும் இடங்கள் நம் மனது வரை பாரம் ஏற்றி விடுகிறது.
பாத்திரம் சிறிது என்றாலும், அதை நடிப்பால் நேர்த்தியாக்கி இருக்கிறார், பக்ஸ்.
நிக்கி கண்ணனின் ஒளிப்பதிவும் சங்கர் ரங்கராஜனின் இசையும் ஹென்றி இயக்கத்தில் ராஜா மகளை இன்னும் அலங்கரித்து இருக்கிறது.

ராஜா மகள், ரோஜா மணம்.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2023/03/Raja-magal.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2023/03/Raja-magal-150x150.jpgrcinemaதிரை விமர்சனம்ஒரு தந்தைக்கும் மகளுக்குமான பாசப்பிணைப்பை உணர்த்தும் படம். இந்த பாசமே தந்தைக்கு சோதனையாகவும் ்மகளுக்கு வேதனையாகவும் மாறினால்... ஒரு எளிமையான குடும்பத்தில் பிறந்து சென்னையில் மனைவி வெலினா, மகள் பிரதிக்–ஷாவுடன் வாடகை வீட்டில் குடி இருப்பவர் முருகதாஸ். செல்போன் சர்வீஸ் கடை நடத்தி வரும் முருகதாஸ், அதில் வரும் வருமானத்தைக் கொண்டு தன் குடும்பத் தேவைகளை சமாளித்து வருகிறார். மகள் மீது அளவில்லா பாசம் வைத்திருக்கும் அவர், தன் மகள் எதைக்...