ஈரம் படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப்பிறகு இயக்குநர் அறிவழகன், நடிகர் ஆதி வெற்றிக்கூட்டணியில் உருவாகும் படம் ‘சப்தம்.’ இந்த படத்தில் நாயகியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். முக்கியமான பாத்திரத்தில் நடிகை லைலாவும் தற்போது இணைந்திருக்கிறார்.
லைலாவின் கதாபாத்திரம் ரசிகர்கள் எதிர்பார்க்காத வகையில் ஆச்சர்யம் தரும் வகையிலும், மிக அழுத்தமான பாத்திரமாகவும் இருக்குமென படக்குழு தெரிவித்துள்ளது.
காமெடி ஹாரர் படங்களுக்கிடையில் ஒரு இனிமையான மாற்றமாக இதயத்தை அதிரவைக்கும் ஹாரர் திரில்லராக இப்படம் உருவாகிறது. Aalpha Frames இயக்குநர் அறிவழகன் மற்றும் 7G Films சிவா இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். ஈரம் படத்தில் இந்த வெற்றிக் கூட்டணிக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தமன் இப்படத்திற்கும் இசையமைக்கிறார்.
படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2023/03/4d0baf8a-c01d-4fc6-a21d-f5548214b188.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2023/03/4d0baf8a-c01d-4fc6-a21d-f5548214b188-150x150.jpgrcinemaசினிமா செய்திகள்ஈரம் படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப்பிறகு இயக்குநர் அறிவழகன், நடிகர் ஆதி வெற்றிக்கூட்டணியில் உருவாகும் படம் ‘சப்தம்.’ இந்த படத்தில் நாயகியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். முக்கியமான பாத்திரத்தில் நடிகை லைலாவும் தற்போது இணைந்திருக்கிறார். லைலாவின் கதாபாத்திரம் ரசிகர்கள் எதிர்பார்க்காத வகையில் ஆச்சர்யம் தரும் வகையிலும், மிக அழுத்தமான பாத்திரமாகவும் இருக்குமென படக்குழு தெரிவித்துள்ளது. காமெடி ஹாரர் படங்களுக்கிடையில் ஒரு இனிமையான மாற்றமாக இதயத்தை அதிரவைக்கும் ஹாரர் திரில்லராக இப்படம் உருவாகிறது. Aalpha...