கிராமத்தில் வறுமையோடு போராடும் ஒரு ஏழைக் குடும்பம்.அப்பா சார்லி, அம்மா ஈஸ்வரிராவுடன் ஒரே மகளாக வரலட்சுமி. இவர்களின் வீட்டில் ஒரு இரவு தங்கி விட்டு செல்வதற்கு அனுமதி கேட்கிறார் வழிப்போக்கனாக வரும் சந்தோஷ் பிரதாப். அவர்களும் சம்மதிக்கிறார்கள்.

இதற்கிடையே, சந்தோஷ் பிரதாப் வைத்திருக்கும் பணம் மற்றும் தங்க நகைகள் மீது வரலட்சுமிக்கு ஈர்ப்பு வர, அவற்றை அபகரிக்க முடிவு செய்கிறார். அதற்காக தனது தாய், தந்தை உதவியுடன் சந்தோஷ் பிரதாப்பை கொலை செய்ய திட்டமிடுகிறார். அவரின் எண்ணம் செயல் வடிவம் பெற்றதா என்பதே விறுவிறுப்புமயமான இந்த ‘கொன்றால் பாவம்.’
மல்லிகா என்ற கதாபாத்திரத்தில் வரலட்சுமி. நகையை அபகரிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்த அந்த ராத்திரி அவரது அடுத்தடுத்த மூவ்களில் நடிப்புக் கொடி தானாகவே பட்டொளி வீசி பறக்கத் தொடங்கி விடுகிறது.

நாயகனாக நடித்திருக்கும் சந்தோஷ் பிரதாப், மிக நிதானமான நடிப்பின் மூலம் வசீகரித்து விடுகிறார். படத்தின்பலமே இவரதுகேரக்டர்தான் . அதை உணர்ந்து தனது நடிப்பில் பூர்த்தி செய்கிறார்.

நாயகியின் பெற்றோராக சார்லி-ஈஸ்வரிராவ் தங்கள் அனுபவ நடிப்பால் மனதை அள்ளிக் கொள்கிறார்கள். பார்வையற்றவராக வரும் சென்ட்ராயன், மீசை ராஜேந்திரன், மனோபாலா, இயக்குநர் சுப்பிரமணிய சிவா என படத்தில் சின்ன வேடத்தில் வருபவர்கள் கூட மனதில் சின்னமாய் பதிந்து போகிறார்கள்.
ஒளிப்பதிவாளர் செழியன் 1980களில் நடக்கும் இந்த கதைக்கு தனது கேமராவால் உயிர் கொடுத்திருக்கிறார். நெருப்பு வெளிச்சத்தை வைத்தே பெரும்பாலான காட்சிகளை உயிர்ப்புடன் தந்திருக்கிறார்.
இசையமைத்த சாம் சி.எஸ். மிரட்டியிருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் தயாள் பத்மநாபன், ‘பேராசை பெரும் நஷ்டம்’ என்ற பழமொழிக்கு ஏற்ப அமைந்த கதையை விறுவிறுப்பான சஸ்பென்ஸ் பின்னணியில் கொடுத்திருக்கிறார்.
ஒரு வீட்டில், ஒரு இரவு நடக்கும் கதையாக இருந்தாலும், கதை மாந்தர்களின் உணர்வுகளை, மனப்போராட்டங்களை காட்சிப்படுத்தியிருப்பது தனி அழகு. எதிர்பாராத கிளைமாக்சிலும் திரைக்கதை சிற்பியாக முன்னிற்கிறார்.
அதற்காகவே கொண்டாடலாம், அரிதினும் அரிதான இந்த படைப்பை.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2023/03/Untitled-1024x576.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2023/03/Untitled-150x150.jpgrcinemaசினிமா செய்திகள்திரை விமர்சனம்கிராமத்தில் வறுமையோடு போராடும் ஒரு ஏழைக் குடும்பம்.அப்பா சார்லி, அம்மா ஈஸ்வரிராவுடன் ஒரே மகளாக வரலட்சுமி. இவர்களின் வீட்டில் ஒரு இரவு தங்கி விட்டு செல்வதற்கு அனுமதி கேட்கிறார் வழிப்போக்கனாக வரும் சந்தோஷ் பிரதாப். அவர்களும் சம்மதிக்கிறார்கள். இதற்கிடையே, சந்தோஷ் பிரதாப் வைத்திருக்கும் பணம் மற்றும் தங்க நகைகள் மீது வரலட்சுமிக்கு ஈர்ப்பு வர, அவற்றை அபகரிக்க முடிவு செய்கிறார். அதற்காக தனது தாய், தந்தை உதவியுடன் சந்தோஷ் பிரதாப்பை...