ஸ்ரீலக்‌ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி தயாரிப்பில், இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒதெலா இயக்கத்தில், நேச்சுரல் ஸ்டார் நானி-கீர்த்தி சுரேஷ் நடிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியத் திரைப்படமாக உருவாகி வருகிறது ‘தசரா.’ முதல் பாடல் வெளியாகி வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது இரண்டாவதாக ‘தீக்காரி’ பாடல் வெளியாகியுள்ளது. மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இப்பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இரண்டாவது பாடலான ‘தீக்காரி தூரம் ஆக்குறியாடி’ பாடல் ஒரு மென்சோக காதல் பாடலாக மனதை மயக்குகிறது. நாயகனின் காதல் வலியைச் சொல்லும் இப்பாடல் கேட்டவுடனே மனதிற்குள் ஒட்டிக் கொள்ளும் அழகான பாடலாக அமைந்துள்ளது. ரசிகர்களுக்கு ஆனந்த அதிர்ச்சியாக இப்பாடலில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வீடியோ பாடலில் தோன்றுவதுடன் நாயகன் நானியுடன் இணைந்து நடனமும் ஆடியுள்ளார். இவர்கள் கூட்டணியைத் திரையில் பார்ப்பது ரசிகர்களுக்கு இன்னொரு ஸ்பெஷல் விருந்தாகவே இருக்கும்.
ஸ்ரீலக்‌ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி மிகப்பெரும் பட்ஜெட்டில் தயாரிக்கிறார். ஸ்ரீகாந்த் ஒதெலா இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

சத்யன் சூரியன் ISC ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி, சாய்குமார், ஜரீனா வஹாப் முக்கிய கேரக்டர்களில் இருக்கிறார்கள்.
நவின் நூலி எடிட்டராகவும், அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், விஜய் சாகந்தி நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள்.

தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வரும் மார்ச் மாதம் 30-ந்தேதி வெளியாகிறது, தசரா.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2023/02/748b4ca0-953e-4a53-afe5-305cfae8221a-1.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2023/02/748b4ca0-953e-4a53-afe5-305cfae8221a-1-150x150.jpgrcinemaசினிமா செய்திகள்ஸ்ரீலக்‌ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி தயாரிப்பில், இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒதெலா இயக்கத்தில், நேச்சுரல் ஸ்டார் நானி-கீர்த்தி சுரேஷ் நடிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியத் திரைப்படமாக உருவாகி வருகிறது ‘தசரா.’ முதல் பாடல் வெளியாகி வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது இரண்டாவதாக ‘தீக்காரி’ பாடல் வெளியாகியுள்ளது. மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இப்பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இரண்டாவது பாடலான ‘தீக்காரி தூரம் ஆக்குறியாடி’ பாடல்...