தெலுங்கு திரைப்பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ், நடிகை சம்யுக்தா , சமுத்திரக்கனி, கென் கருணாஸ், மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வாத்தி.’ தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாகியுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.
படத்தின் விமர்சனம் பார்ப்போமா…
1990 காலகட்டத்தில் இந்தியாவில் தனியார் மயமாக்கல் கொள்கை அமலுக்கு வருகிறது. மருத்துவம், பொறியியல் போன்ற கல்வியின் வியாபார வளர்ச்சியின் நோக்கத்தை தெரிந்து கொண்ட தனியார் பள்ளிகள், நுழைவுத்தேர்வுக்கு பயிற்சி மையங்களை தொடங்கி நன்கு தேர்ந்த பள்ளி ஆசிரியர்களை விலைக்கு வாங்கி அரசு பள்ளிகளை மூடுகின்றனர். மூடப்பட்ட அரசு பள்ளிகளை திறக்கக்கோரி மக்கள் போராட்டம் வெடிக்க, அரசு கட்டண ஒழுங்குமுறை விதியை கொண்டு வந்து தனியார் பள்ளிகளுக்கு செக் வைக்க நினைக்கிறது.

ஆனால் தனியார் பள்ளி கூட்டமைப்பு சங்கத்தின் தலைவரான சமுத்திரக்கனியோ, தனியார் பள்ளி தான் சிறந்தது என்ற பிம்பத்தை மக்கள் மத்தியில் உருவாக்குகிறார். இதனால் அரசுப் பள்ளியில் தங்கள் பிள்ளைகளை சேர்க்கும் எண்ணம் பெற்றோரிடம் இருந்து தூரமாக, ஆட்டு மந்தை போல் தனியார் பள்ளி நோக்கி ஓடுகிறார்கள். கேட்கிற கட்டணத்தை அது பகல் கொள்ளை என்று தெரிந்த போதும் கடன் வாங்கியாவது கொட்டுகிறார்கள். இதற்கிடையே தன்னை நல்லவர் போல் காட்டிக் கொள்வதற்காக சில அரசுப் பள்ளிகளை தனியார் பள்ளிகளே தத்தெடுத்து இயக்கும் என அறிவிக்கிறார், சமுத்திரக்கனி. அப்படி தத்தெடுக்கப்பட்ட ஒரு கிராமத்து அரசு பள்ளிக்கு தன் பள்ளியில் வேலை செய்யும் தனுஷை வாத்தியாராக நியமிக்கிறார்.

ஆனால் ஒரு கட்டத்தில் தனுஷே சமுத்திரக்கனிக்கு எதிராக திரும்ப, அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது கதை.

எந்த கேரக்டராக இருந்தாலும் அதில் தன்னை கச்சிதமாக பொருந்திக்கொள்ளும் தனுஷ், இந்த படத்தில் துடிப்புள்ள வாத்தியாராக மனதில் பதிகிறார். ஏழை மாணவர்களின் கல்விக்காக போராடுவது, படிப்பு எவ்வளவு முக்கியம் என்று பெற்றோர்களுக்கு பாடம் எடுப்பது , சாதி பிரிவினை பார்க்கும் மாணவர்களுக்கு அறிவுரைப்பது என ஆசிரியராகவே மாறிப்போகிறார். சக ஆசிரியை சமயுக்தாவிடம் காதலை சொல்லும் இடததில் அந்த கண்ணியம் மனதை வசீகரிக்கிறது. பாடம் சம்பந்தப்பட்ட படம் என்பதால் சில நேரங்களில் நாம் இருப்பது பள்ளியிலா? திரையரங்கிலா என்ற சந்தேகம் வந்து போவதும் உண்மை. என்றாலும் தனுஷின் அசுரப்பசிக்கு இந்த கேரக்டர் அளவு சாப்பாடு தான்.

நாயகியாக நடித்திருக்கும் சம்யுக்தா அரசு பள்ளி ஆசிரியராகவும், தனுஷின் காதலியாகவும் சில காட்சிகள் வந்து போகிறார்.
நல்லவனாக நடித்தால் ஒரு மேனரிசம். வில்லனாக நடித்தால் இ்ன்னொரு மேனரிசம் என்ற அளவுகோலுக்குள் தன்னை நிறுத்திக் கொள்ளும் சமுத்திரக்கனிக்கு இம்முறை வில்ல அவதாரம். தன்னால் அரசுப்பள்ளிக்கு அனுப்பப்பட்ட நாயகன் தனது ‘கல்விக் கொள்ளை’க்கு எதிரானவன் எனத் தெரிய வரும் இடத்தில், அந்த வில்லத்தனத்தை கண்முன் கொண்டு வரும் இடத்தில், நிஜமாகவே சினிமாவுக்கு கிடைத்த அட்சய பாத்திரம் இந்த சமுத்திரக்கனி.,
சாய்குமார், தணிகலபரணி, சிறப்பு தோற்றத்தில் வரும் பாரதிராஜா, ஷாரா, நரேன், ஹரிஷ் பெராடி, மொட்டை ராஜேந்திரன் கொடுத்த கேரக்டர்களில் சிறப்பு சேர்க்கிறார்கள்.
யுவராஜின் ஒளிப்பதிவு கதை நடக்கும் களங்கள் அனைத்தும் செயற்கையான அரங்குகள் என்பதை வெட்டவெளிச்சமாக்கி விடுகிறது.
ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் ரசனை.

கல்வி பற்றிய கதையை சினிமா மொழியில் சொல்லிய விதத்தில் இயக்குநர் வெங்கி அத்தூரி சொதப்பியிருக்கிறார். குறிப்பாக தனுஷ் போன்ற சகலமும் தெரிந்த ஒரு ஹீரோவை வைத்துக் கொண்டு படம் முழுவதும் பேசிக்கொண்டா இருப்பது?
தனுஷ் ரசிகர்களுக்கான படமாக இல்லை என்றாலும், மாணவர்களும், பெற்றோர்களும் நிச்சயம் அறிந்து கொள்ள வேண்டிய பாடம் என்கிற விதத்தில் இந்த வாத்தி, நேர்த்தி.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2023/02/Fo1oeBjaMAArgQK.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2023/02/Fo1oeBjaMAArgQK-150x150.jpgrcinemaதிரை விமர்சனம்தெலுங்கு திரைப்பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ், நடிகை சம்யுக்தா , சமுத்திரக்கனி, கென் கருணாஸ், மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வாத்தி.’ தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாகியுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். படத்தின் விமர்சனம் பார்ப்போமா... 1990 காலகட்டத்தில் இந்தியாவில் தனியார் மயமாக்கல் கொள்கை அமலுக்கு வருகிறது. மருத்துவம், பொறியியல் போன்ற கல்வியின் வியாபார வளர்ச்சியின் நோக்கத்தை தெரிந்து கொண்ட தனியார்...