பிரபல தெலுங்கு நடிகர் நாகசைதன்யா, இயக்குநர் வெங்கட்பிரபுவுடன் இணைந்திருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இந்தப் படம் நாகசைதன்யாவின் முதல் தமிழ்-தெலுங்கு பைலிங்குவலாக இருக்கும். அதேபோல, இயக்குநர் வெங்கட்பிரபுவுக்கும் அவரது இயக்கத்தில் இதுதான் முதல் தெலுங்கு படம். கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.

ஸ்ரீனிவாசா சித்தூரி ‘ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரில் இந்தப் படத்தை தயாரிக்கிறார். ‘மாஸ்ட்ரோ’ இளையராஜாவும், ‘லிட்டில் மாஸ்ட்ரோ’ யுவன்ஷங்கர் ராஜாவும் இணைந்து இசையமைக்கிறார்கள். இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து ஒரு படத்தின் ஆல்பத்தில் பணிபுரிவது இதுவே முதல்முறை. நடிகர் நாகசைதன்யா இதுவரை கதாநாயகனாக நடித்த படங்களிலேயே இதுதான் அதிக பட்ஜெட் கொண்ட படமாக இருக்கும்.
ஒளிப்பதிவு SR கதிர். வசனம் அபூரி ரவி. எடிட்டிங் வெங்கட் ராஜன். தயாரிப்பு வடிவமைப்பு ராஜீவ். கலை இயக்கம் சத்யநாராயணா. முக்கிய சண்டைக் காட்சிகளை படமாக்குவதற்காக சர்வதேச ஆக்‌ஷன் இயக்குநரான யானிக் பென் இதில் இணைந்துள்ளார். அதேபோல, மகேஷ் மாத்யூவும் அதிரடி காட்சிகளை அமைக்கிறார். பவன் குமார் இந்தப் படத்தை வழங்குகிறார்.