சிறந்த திரைக்கதை, சிறந்த பின்னணி இசை, சிறந்த திரைப்படம், சிறந்த நடிகை, விமர்சன ரீதியாக சிறந்த படம் என மொத்தம் 16 சர்வதேச விருதுகளை குவித்துள்ள படம். சாதிய இறுக்கத்தில் கல்விக்கான தேடலை சொன்ன விதத்தில் விருதுகள் சாத்தியமாகி இருக்கிறது. சாதி ஏற்றத்தாழ்வு நிறைந்த ஒரு கிராமத்தில் வெவ்வேறு சாதியைச் சேர்ந்த பிளஸ்- படிக்கும் நாயகன்-நாயகி காதலிக்கிறார்கள். இந்த காதல் தெரிந்தால் ஊர் விட்டு வைக்குமா? மருத்துவ படிப்புக் கனவில் இருக்கும் அவர்களை இந்த காதல் என்ன செய்தது? விடை, எதிர்பாராத கிளைமாக்ஸ்.
காதலனாக விக்னேஷ், காதலியாக ஆரா. பொருத்தமான தேர்வு. அதிலும் ‘எங்க வீட்லயெல்லாம் தண்ணி குடிப்பீங்களா?’ என்று நாயகனின் அம்மா கேட்ட மாத்திரத்தில் ஆராவின் உடனடி ரியாக்–ஷன் சாதிய அடித்தளத்தையே ஆட்டம் காண வைத்து விடுகிறது.
நாயகியின் அம்மாவாக வரும் செந்திகுமாரி சிறப்பு. நடிப்பிலும் பொறுப்பு கூடித்தெரிகிறது. சாதிப்பெருமை பேசும் அவர் கிளைமாக்சில் எடுக்கும் முடிவில் உயர்ந்து நிற்கிறார்.
சமீரின் ஒளிப்பதிவும், டி.எம்.உதயகுமாரின் இசையும் குழலிக்கு பக்கத்தூண்கள்.
செரா.கலையரசனின் இயக்கி இருக்கிறார். காதலுக்காக எதையும் தூக்கிப் போடுகிறவர்கள் மத்தியில் கல்விக்காகக் காதலைத் துறக்க முடிவெடுக்கும் புதிய இளைய தலைமுறையை காட்சிப்படுத்திய விதத்தில் நிமிர்ந்து நிற்கிறார். ஆனாலும் அந்த கிளைமாக்ஸ் நெஞ்சில் ஆணியடித்து விடுகிறது.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2022/09/thumb_large_kulali.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2022/09/thumb_large_kulali-150x150.jpgrcinemaதிரை விமர்சனம்சிறந்த திரைக்கதை, சிறந்த பின்னணி இசை, சிறந்த திரைப்படம், சிறந்த நடிகை, விமர்சன ரீதியாக சிறந்த படம் என மொத்தம் 16 சர்வதேச விருதுகளை குவித்துள்ள படம். சாதிய இறுக்கத்தில் கல்விக்கான தேடலை சொன்ன விதத்தில் விருதுகள் சாத்தியமாகி இருக்கிறது. சாதி ஏற்றத்தாழ்வு நிறைந்த ஒரு கிராமத்தில் வெவ்வேறு சாதியைச் சேர்ந்த பிளஸ்- படிக்கும் நாயகன்-நாயகி காதலிக்கிறார்கள். இந்த காதல் தெரிந்தால் ஊர் விட்டு வைக்குமா? மருத்துவ படிப்புக்...