என்ஜினியரிங் படித்து விட்டு சென்னையில் தனது நண்பர் ரூமில் தங்கி வேலை தேடுகிறார், கிராமத்து வெங்கடேஷ். ஆங்கிலத்தில் சரளமாகப் பேச தடுமாறுவதால் வேலை வாய்ப்புகள் நழுவிப்போக, விரக்தியில் குடிப்பழக்கத்துக்கு ஆளாகிறார். ஒருகட்டத்தில் இவர் தங்கி இருக்கும் வீட்டு உரிமையாளர் இவரை திருத்துகிறார். இதன் பிறகாவது ஹீரோ வெங்கடேஷ்க்கு வேலை கிடைத்ததா? அவரது எதிர்காலம் என்னாயிற்று? என்பதே கதிர் படத்தின் திரைக்களம்.
முதல் படத்திலேயே இயல்பான நடிப்பில் ஆச்சரியப்படுத்துகிறார், நாயகன் வெங்கடேஷ். அவரையடுத்து படத்தை தாங்கிப் பிடிப்பவர் வீட்டு உரிமையாளராக வரும் ரஜினி சாண்டி தான். அன்பும் மனிதநேயமும் ஒருங்கே அமையப்பெற்ற அந்த கேரக்டர் தமிழ் சினிமாவிற்கு புதுசு. நாயகியாக வரும் பாவ்யா நடிப்பில் ரசனை கூட்டுகிறார்.

இரண்டாம் பாதியில் சிறிது நேரமே வந்தாலும் படம் முழுக்க வியாபித்து நிற்கிறார், சந்தோஷ் பிரதாப். விவசாயத்தை புதுசாக யோசித்த விஷயத்தில் இயக்குனர் தினேஷ் பழனிவேல் ‘வாங்கய்யா வாங்க’ என்று வரவேற்க வைக்கிறார். ஒளிப்பதிவும் இசையும் இந்த கதிரின் இன்னபிற ஒளிக்கீற்றுகள். பெரிதும் புதுமுகங்கள் என்றாலும் ரசிக்க வைக்கிற திரைக்கதை மூலம் நிமிர்ந்து நிற்கிறது, படம்.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2022/04/bg3.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2022/04/bg3-150x150.jpgrcinemaசினிமா செய்திகள்என்ஜினியரிங் படித்து விட்டு சென்னையில் தனது நண்பர் ரூமில் தங்கி வேலை தேடுகிறார், கிராமத்து வெங்கடேஷ். ஆங்கிலத்தில் சரளமாகப் பேச தடுமாறுவதால் வேலை வாய்ப்புகள் நழுவிப்போக, விரக்தியில் குடிப்பழக்கத்துக்கு ஆளாகிறார். ஒருகட்டத்தில் இவர் தங்கி இருக்கும் வீட்டு உரிமையாளர் இவரை திருத்துகிறார். இதன் பிறகாவது ஹீரோ வெங்கடேஷ்க்கு வேலை கிடைத்ததா? அவரது எதிர்காலம் என்னாயிற்று? என்பதே கதிர் படத்தின் திரைக்களம். முதல் படத்திலேயே இயல்பான நடிப்பில் ஆச்சரியப்படுத்துகிறார், நாயகன் வெங்கடேஷ்....