குடிப்பழக்கத்தால் வாழ்வு சீரழிவதை மையப்படுத்தி பேராசை பெருநஷ்டம் என்ற கருத்துக்கு முன்னுதாரணமாக ‘முன்னா.’

ஊர் மக்களால் கீழ்த்தரமாய் நடத்தப்படுகிற, உடம்பில் சாட்டையடித்து பிழைப்பு நடத்துகிற களைக் கூத்தாடிக் குடும்பத்தின் வாரிசான முன்னா தங்களது வாழ்க்கை முறை பிடிக்காமல், சொகுசான வாழ்க்கைக்கு ஆசைப்படுகிறான். அதிர்ஷடம் மூலமாக கோடீஸ்வரனாகிறான். எதிர்பார்த்த வாழ்க்கை கிடைத்தும் அவனால் அனுபவிக்க முடியாமல் போகிறது. காரணம் என்ன? திரைக்கதையோட்டத்தில் பதில் இருக்கிறது.

முன்னாவாக வருகிற சங்கை குமரேசனின் அப்பாவித் தோற்றம் அவர் ஏற்றுள்ள கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருக்கிறது. படத்தை இயக்கியிருப்பதும் அவரே. அவரது முயற்சிக்கு பாஸ்மார்க் போட்டு வரவேற்கலாம்.

முன்னாவுக்கு தங்கையாக வருகிற நியாகிருஷ்ணாவின் அழகும் இளமையும் கவர்கிறது. எந்த களைக்கூத்தாடிக் குடும்பத்திலும் அப்படியொரு பளீர் தோற்றத்தில் ஒரு பெண்ணைப் பார்க்க முடியாது என்பது யதார்த்தம்.

மொடாக்குடியராக வருகிற அந்த வழுக்கைத் தலை ஆசாமி (கென்னடி) சற்றே சிரிக்க வைக்கிறார். அவரது கதாபாத்திரப் பெயர் தண்ணிப் பாம்பு என்பது சுவாரஸ்யம்.

ரம்யா, ராஜு, சிந்து, கென்னடி, சண்முகம்,வெங்கட் என படத்தின் மற்ற கதாபாத்திரங்களும் ஏற்ற பாத்திரங்களில் குறையின்றி .

சங்கை குமரேசன் எழுதிய பாடல்கள் டி.ஏ. வசந்த் இசையில் இதமான உணர்வைத் தருகின்றன. யாரு ஈஸ்வரன்’ பாடல் கூடுதலாய் கவர்கிறது.

சுனில் லாஸரின் பின்னணி இசை காட்சிகளின் நகர்தலுக்கு தோள்கொடுத்திருக்கிறது.

இயக்குநர் கருத்து சொல்வதற்கு காட்டிய ஈடுபாட்டை சுவாரஸ்யமாக திரைக்கதை அமைப்பதிலும் காட்டியிருந்தால் முன்னா வெற்றியில் முன்னணி வகித்திருப்பான்!

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2021/04/Munna-movie-preview.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2021/04/Munna-movie-preview-150x150.jpgrcinemaதிரை விமர்சனம்குடிப்பழக்கத்தால் வாழ்வு சீரழிவதை மையப்படுத்தி பேராசை பெருநஷ்டம் என்ற கருத்துக்கு முன்னுதாரணமாக 'முன்னா.' ஊர் மக்களால் கீழ்த்தரமாய் நடத்தப்படுகிற, உடம்பில் சாட்டையடித்து பிழைப்பு நடத்துகிற களைக் கூத்தாடிக் குடும்பத்தின் வாரிசான முன்னா தங்களது வாழ்க்கை முறை பிடிக்காமல், சொகுசான வாழ்க்கைக்கு ஆசைப்படுகிறான். அதிர்ஷடம் மூலமாக கோடீஸ்வரனாகிறான். எதிர்பார்த்த வாழ்க்கை கிடைத்தும் அவனால் அனுபவிக்க முடியாமல் போகிறது. காரணம் என்ன? திரைக்கதையோட்டத்தில் பதில் இருக்கிறது. முன்னாவாக வருகிற சங்கை குமரேசனின் அப்பாவித் தோற்றம்...