சத்ய ஜோதி ஃபிலிம்ஸ், இந்தியத் திரையுலகின் மிகவும் மதிப்புமிக்க மற்றும் பெருமை மிகு தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று. இந்நிறுவனத்தின் தயாரிப்பில் ‘மரகத நாணயம்’ புகழ் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில், ஹிப்ஹாப் தமிழாவின் ‘வீரன்’ மற்றும் தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர்’ படங்கள் உருவாக்கத்தில் உள்ளன.
இந்நிலையில், தற்போது பிளாக்பஸ்டர் காம்போவாக நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் திரைப்பட இயக்குநர் ராம் குமார் ஆகியோரின் கூட்டணியில் தங்களது அடுத்த தயாரிப்பை சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் பெருமையுடன் அறிவித்துள்ளது. இந்த ஜோடி முன்னதாக ‘முண்டாசுப்பட்டி’ மற்றும் ‘ராட்சசன்’ ஆகிய படங்கள் மூலம் விமர்சன ரீதியாகவும் மற்றும் வணிக ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைக் குவித்துள்ளது. இவர்களை புதிய படத்தின் மூலம் மீண்டும் இணைத்திருக்கிறது, சத்யஜோதி பிலிம்ஸ்.
இன்னும் பெயரிடப்படாத இந்தத் திரைப்படம், பெரிய பட்ஜெட்டில் நகைச்சுவையுடன் கூடிய காதல் கதையை ஃபேண்டஸி கலந்து சொல்லும் படமாக இருக்கும். படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் T.G. தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிக்கின்றனர்.
படத்தின் படப்பிடிப்பு, ஏனைய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் பற்றிய அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியிடப்படும்.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2023/01/505a50ab-2dda-4af4-9f24-e65703dc7929-1024x682.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2023/01/505a50ab-2dda-4af4-9f24-e65703dc7929-150x150.jpgrcinemaசினிமா செய்திகள்சத்ய ஜோதி ஃபிலிம்ஸ், இந்தியத் திரையுலகின் மிகவும் மதிப்புமிக்க மற்றும் பெருமை மிகு தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று. இந்நிறுவனத்தின் தயாரிப்பில் 'மரகத நாணயம்' புகழ் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில், ஹிப்ஹாப் தமிழாவின் 'வீரன்' மற்றும் தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர்' படங்கள் உருவாக்கத்தில் உள்ளன. இந்நிலையில், தற்போது பிளாக்பஸ்டர் காம்போவாக நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் திரைப்பட இயக்குநர் ராம் குமார் ஆகியோரின் கூட்டணியில் தங்களது அடுத்த தயாரிப்பை சத்ய ஜோதி...