நட்பைக் கொண்டாடும் கதையம்சம் – ‘களத்தில் சந்திப்போம்.’

தீபாவளி, பொங்கலின்போது அந்த பண்டிகையின் உற்சாகத்தைக் கூடுதலாக்க, குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும்படியான படங்களை எதிர்பார்ப்போம். அப்படியான எதிர்பார்ப்புக்கு ஏற்ற படம்

அருள்நிதி – ஜீவா இருவரும் உயிருக்குயிரான நண்பர்கள். கபடி வீரர்களான இருவரும் எதிரெதிர் அணியில் விளையாடி தெறிக்க விடுபவர்கள். ‘ஒரே அணியில் விளையாடி இருவரும் சேர்ந்து ஜெயிக்கலாமே?’ என்றால், ‘விளையாட்டு என்றால் எப்படியும் ஒரு அணி தோற்கும். தோற்கிற அணியில் நாங்களும் இருக்கலாம். என்னிடம் அவனோ, அவனிடம் நானோ தோற்கலாம், நாங்கள் வேறு யாரிடமும் தோற்க மாட்டோம்’ என்று விளக்கம் கொடுப்பவர்கள்.

அப்படிப்பட்ட நண்பர்களின் வாழ்வில் குறுக்கிடுகிற காதலும், அதனால் அவர்களுக்குள் ஏற்படும் மோதலுமே கதை. திரைக்கதையால் காதலும் வெல்கிறது; நட்பும் வெல்கிறது. இயக்கம்: என். ராஜசேகர்

அருள்நிதி – ஜீவா இருவருக்கும் புகுந்து விளையாடும்படியான கதாபாத்திரம். இயல்பான நடிப்பால், சண்டைக் காட்சிகளில் காட்டும் ஆக்ரோஷத்தால், காதல் காட்சிகளில் வெளிப்படுத்தும் உணர்வுகளால் ஈர்க்கிறார்கள்.

மஞ்சிமா மோகனுக்கு வந்துநின்றாலே போதும் என்கிற அளவிலும், பிரியா பவானி சங்கருக்கு முகத்தில் மென்சோகம் காட்டினால் போதும் என்கிற அளவிலும் காட்சிகள் வைக்கப்பட, அதற்கேற்ப நடித்ததில் இருவருமே நிறைவு!

கைகலப்புக்கு அருள்நிதியும் ஜீவாவும் என்றால் கலகலப்புக்கு ரோபோ சங்கர், பால சரவணன்.

கதைக்களம் பெரிது. ராதாரவி, ஆடுகளம் நரேன், வேல ராமமூர்த்தி, இயக்குநர் மாரிமுத்து, இளவரசு, ஸ்ரீரஞ்சனி, ரேணுகா என அனுபவ நடிகர், நடிகைகளின் பங்களிப்பும் பெரிது.

சொல்லிக்கொள்ளும்படி பாடல்கள் தராவிட்டாலும் யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை அதிரடி.

வசனங்களால் படத்தின் அத்தனை காட்சிகளுக்கும் ஊக்கமருந்து செலுத்தியிருக்கிறார் ஆர் .அசோக்.

சண்டைக் காட்சிகளில் தீ பறக்கிறது. அமைத்திருப்பவர்; பிரதீப்.

வேகவேகமாக நகரும் காட்சிகளுக்கு எடிட்டிங்கால் கூடுதல் வேகம் தந்திருக்கிறார் எடிட்டர் தினேஷ் பொன்ராஜ்.

சிறப்பம்சங்கள்:-
அடுத்தடுத்த காட்சிகளை யூகிக்க முடிந்தாலும் அவற்றை அலுப்பு தட்டாமல் நகர்த்தியிருப்பது.

இரண்டு ஹீரோக்கள் நடித்தால் ஒருவரை வில்லனாக்குவது என்ற பாணியைக் கைவிட்டிருப்பது.

படத்தை தயாரித்திருப்பது சூப்பர் குட் பிலிம்ஸ். அதன் அதிபர் ஆர்.பி. செளத்ரியின் மகன் ஜீவா. தங்கள் தயாரிப்பில் வருகிற படம் என்பதால் காட்சிகளில் ஜீவாவுக்கே முக்கியத்துவம் இருக்கவேண்டும் என்றெல்லாம் யோசிக்காமல், கதையில் இன்னொரு ஹீரோவான அருள்நிதிக்கும் சமமான முக்கியத்துவம் தந்திருப்பது.

ஜீவா – அருள்நிதி இருவரும் வரவேற்புக்குரிய ஹீரோக்கள் என்றாலும் ஈகோ பார்க்காமல் ஒத்துக்கொண்டு நடித்திருப்பது.

நடிகர்கள் : ஜீவா ,அருள்நி ,திமஞ்சிமா மோகன் , பிரியா பவனி ,ராதாரவி , ரோபோசங்கர் , பால சரவணன், இளவரசு , ஆடுகளம் நரேன் , மாரிமுத்து , வேலராமமூர்த்தி ,ரேணுகா , ஸ்ரீரஞ்சனி , பூலோகம் ராஜேஷ் , பெனிடோ ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள் .

தொழில்நுட்ப கலைஞர்கள் :

கதை –திரைக்கதை- எழுத்து -இயக்கம் – N .ராஜசேகர்
தயாரிப்பு – சூப்பர் குட் பிலிம்ஸ்
வசனம் – ஆர் .அசோக்
இசை – யுவன் சங்கர் ராஜா
பாடல்கள் – பா .விஜய் , விவேகா
ஒளிப்பதிவு – அபிநந்தன் ராமானுஜம்
படத்தொகுப்பு – தினேஷ் பொன்ராஜ்
கலை – M .முருகன்
நடனம் – ராஜு சுந்தரம்
சண்டை பயிற்சி – பிரதீப்
நிர்வாக தயாரிப்பு – ஸ்ரீநாத் ராஜா மணி
தயாரிப்பு மேற்பார்வை – புதுக்கோட்டை M . நாகு , R .ரமேஷ்
மக்கள் தொடர்பு – ரியாஸ் கே அஹ்மத் , மௌனம் ரவி

CREW:
Story, Screenplay & Directed By : N. Rajasekar
Producer : R. B. Choudary
Executive Producer: Srinath Rajamani
DOP : Abinanthan Ramanujam
Music : Yuvan Shankar Raja
Editor : Dinesh Ponraj
Dialogues : Ashok. R
Art Director : M.G. Murugan
Lyrics : Pa. Vijay , Viveka
Dance Choreography : Raju Sundaram
Stunt : Pradeep Kumar
Costume Designs : Nanditha Ramesh
Sound Design : A. Sathiskumar , Harish
VFX : Lorven
Dubbing : Super Good Studios
Post Production : B2H
Production Managers : Puthugottai M. Nagu , Ramesh Rajavel
Make – Up : A. Shanmugam
PRO : Mounam Ravi, Riyaz k. Ahamad
Stills : Stills Siva
Publicity Designs : N.Jeeva
Label:: Saregama India Ltd.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2021/02/kal.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2021/02/kal-150x150.jpgrcinemaசினிமா செய்திகள்திரை விமர்சனம்நட்பைக் கொண்டாடும் கதையம்சம் - 'களத்தில் சந்திப்போம்.' தீபாவளி, பொங்கலின்போது அந்த பண்டிகையின் உற்சாகத்தைக் கூடுதலாக்க, குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும்படியான படங்களை எதிர்பார்ப்போம். அப்படியான எதிர்பார்ப்புக்கு ஏற்ற படம் அருள்நிதி - ஜீவா இருவரும் உயிருக்குயிரான நண்பர்கள். கபடி வீரர்களான இருவரும் எதிரெதிர் அணியில் விளையாடி தெறிக்க விடுபவர்கள். 'ஒரே அணியில் விளையாடி இருவரும் சேர்ந்து ஜெயிக்கலாமே?' என்றால், 'விளையாட்டு என்றால் எப்படியும் ஒரு அணி தோற்கும். தோற்கிற அணியில் நாங்களும்...