ஒரு தவிர்க்க முடியாத காதல் கதை..! ‘தேரே இஷ்க் மே’ உலக அளவில் ஒரு வாரத்தில் ரூ.118.76 கோடி வசூல்!
தனுஷ் மற்றும் க்ரிதி சனோன் நடிப்பில் வெளியான ‘தேரே இஷ்க் மே’ திரைப்படம், வெறும் ஒரு வாரத்திலேயே உலகளாவிய பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ரூ.118.76 கோடி என்ற மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த சாதனை, படத்தின் கதை பல்வேறு நாடுகளிலும் உள்ள ரசிகர்களுடன் உருவாக்கிய வலுவான இணைப்பை வெளிப்படுத்துகிறது.
மக்கள் மனதில் என்றென்றும் நிலைக்கும் இசையை பரிசாக அளித்த லெஜண்டரி இசையமைப்பாளர் AR ரஹ்மானின் இசை, ஹிமான்ஷு சர்மா மற்றும் நீரஜ் யாதவ் எழுதிய மனதை வருடும் எழுத்து, ஆனந்த் L ராய் கொண்டு சென்ற மென்மையான இயக்கம், பூஷண் குமார் அளித்த வலுவான தயாரிப்பு ஆதரவு ஆகியவை இணைந்து, உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களின் மனதில் இந்த படத்தை ஆழமான உணர்ச்சி மட்டத்தில் தொட்டிருக்கிறது. நடிகர்களின் தீவிரமான நடிப்பும், அடுக்கடுக்கான உணர்ச்சி தரப்பட்ட கதை சொல்லலும் வலுவான வாய் வழி பாராட்டையும் மறுபார்வைகளையும் உருவாக்கியுள்ளது.
புதிய படங்களிடமிருந்து போட்டி இருந்தாலும், ‘தேரே இஷ்க் மே’ தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. பல முக்கிய பகுதிகளில் ஹவுஸ்ஃபுல் காட்சிகள், அதிகரித்து வரும் மக்கள் கூட்டத்தின் காரணமாக, அடுத்த வாரத்திலும் படத்தின் வசூல் நிலைத்திருக்க வாய்ப்பு அதிகமாக இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. பார்வையாளர்கள் இன்னமும் திரைக்கு பெருமளவில் திரண்டுகொண்டிருப்பது, படத்தின் நீடித்த வேகத்துக்கு சான்றாக பார்க்கப்படுகிறது.
‘தேரே இஷ்க் மே’ தற்போது உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருகிறது.
குல்ஷன் குமார், T-சீரிஸ் மற்றும் கலர் யெல்லோ நிறுவனங்கள் வழங்கும் ‘தேரே இஷ்க் மே’ திரைப்படத்தை ஆனந்த் L ராய் மற்றும் ஹிமான்ஷு ஷர்மா தயாரிக்க, பூஷன் குமார் மற்றும் கிருஷண் குமார் இணைந்து தயாரித்துள்ளனர். ஹிமான்ஷு ஷர்மா மற்றும் நீரஜ் யாதவ் எழுதிய திரைக்கதையுடன் ஆனந்த் L ராய் இயக்கியுள்ள இப்படம், AR ரஹ்மான் இசையமைப்பில், ஈர்ஷாத் காமில் பாடல் வரிகளுடன் உருவாகியுள்ளது.
