சினிமா செய்திகள்திரை விமர்சனம்

ட்ரிப்’ சினிமா விமர்சனம்

சற்றே வித்தியாசமான கதைக்களத்தில் கலகலப்பும் கலங்கடிப்புமான விறுவிறு திரில்லராக ‘ட்ரிப்.’

அந்த அடர்ந்த காட்டுக்குள் நான்கைந்து இளைஞர்களும், இளைஞிகளும் ஜாலியாக ட்ரிப் போகிறார்கள். அவர்கள், மனிதர்களை குரூரமாகக் கொன்று தின்கிற அசுரபல மனிதர்களிடம் சிக்குகிறார்கள்.

மனிதர்களைக் கொன்று தின்கிற மனிதர்கள் அந்த காட்டுக்குள் வந்தது எப்படி? அவர்களிடம் சிக்கியவர்களின் கதி என்ன? அறிவியலைப் புகுத்தி, காமெடி மசாலா தூவி, சுவாரஸ்யமாக திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் டென்னிஸ் மஞ்சுநாத்

கதையின் நாயகி சுனைனா அநியாயத்துக்கு பளபளவென்றிருக்கிறார். படம் முழுக்க கையில்லாத பனியனில் வந்து அவர் காட்டுகிற கவர்ச்சி கிறக்கம். அவரோடு டிரிப் அடிக்கிற கல்லூரி வினோத், விஜே சித்து, ராகேஷ், லெஷ்மிபிரியா, நான்சி ஜெனிபர் & டீமிடமிருந்து கதாபாத்திரத்தின் தேவையுணர்ந்த நடிப்பு!

இடைவேளை வரை யோகிபாபுவும் கருணாகரனும் கொஞ்சமே கொஞ்சம் சிரிக்க வைக்கிறார்கள். ஒன்றிரண்டு காட்சிகளில் வருகிற மொட்டை ராஜேந்திரன் நடிப்பு டெம்ப்ளேட்!

கதையினுடைய வேகத்துக்கு வேகம் கூட்டுகிறது சித்துகுமாரின் பின்னணி இசை! கானா பாலாவின் குரலில், படம் முடிந்தபின் ஒலிக்கும் பாடல் செம எனர்ஜி.

காட்டையும் அதன் பசுமையையும் அழகு மாறாமல் சுமந்து வந்து கண்ணுக்கு விருந்து படைக்கிறது உதயஷங்கர் ஜியின் கேமரா!

கதைக்குள் காதல் இருந்தாலும் டூயட் அது இதுவென இழுத்தடிக்காமல், உணர்வை அசைக்கும்படி ஒருசில காட்சி வைத்திருப்பது டச்சிங்!

மனிதர்களை சுற்றி வளைத்து உணவாக்கிக் கொள்(ல்)கிற தாவரங்களை மையமாக வைத்து கதை பின்னியிருப்பது தனித்துவம்.

சிலபல குறைகள், சினிமாத்தனங்கள் இருந்தாலும் வித்தியாசமான அனுபவத்துக்காக பார்க்கலாம்.