B. P. 180 – திரை விமர்சனம்
வடசென்னை காசிமேடு அரசு மருத்துவமனையில் பணிபுரியும் நேர்மையான மருத்துவர் நாயகி தன்யா ரவிச்சந்திரன்.
விபத்தில் இறந்த
ஒரு பெண்ணின் உடற்கூறாய்வில் வயிற்றில் மூன்று மாத கரு இருப்பதை கண்டுபிடிக்கிறார். அந்தப் பெண் திருமணமாகாதவள் என்பதால் கரு பற்றி ரகசியம் காக்கும் படி போன் வடிவில் ஏகப்பட்ட பிரஷர். அதில் ஏகப்பட்ட மிரட்டல்களும் அடங்கும்.
எந்த மிரட்டலுக்கும் பணியாததால் ஒரு கட்டத்தில் அவரை தீர்த்து கட்டவும் துணிகிறார்கள்.
விபத்தில் இறந்து போனது அந்தப் பகுதியில் பிரபல ரவுடி டேனியல் பாலாஜியின் உறவுக்கார பெண் என்பதால் அவரும் தன் பங்குக்கு நாயகியை மிரட்டுகிறார். நாயகியோ கொஞ்சமும் பயப்படாமல் ‘நீ சரியான ஆம்பளையா இருந்தா நேருக்கு நேர் வாடா’ என்கிறார்.
இந்த சவாலை ஏற்று கொலை பாதகத்துக்கு கொஞ்சமும் அஞ்சாத டேனியல் பாலாஜி வந்தாரா? அதன் பின் என்னென்ன நடந்தது என்பது திகுதிகு கிளைமாக்ஸ்.
நேர்மையான மருத்துவராக தன்யா ரவிச்சந்திரன். தனது பணியில் நேர்மை, புத்திக்கூர்மை என அந்த கேரக்டரில் அற்புதமாக வெளிப்பட்டு இருக்கிறார். டேனியல் பாலாஜியிடம் இவர் நேருக்கு நேர் சவால் விடும் காட்சியில் அரங்கம் அதிர கைதட்டுகிறார்கள்.
ஆக்ஷன் ஹீரோயின்கள் வரிசையில் சேரக் கூடிய எல்லாத் தகுதிகளும் தனக்கு இருக்கிறது என நிரூபித்திருக்கிறார்.
வில்லனாக நடித்திருக்கும் டேனியல் பாலாஜி வெகு சிறப்பான நடிப்பில் அந்த வில்ல
கேரக்டரை மகுடம் ஏற்றி வைக்கிறார். தான் பெரிய ஆள் என்கிற மமதையில் இருக்கும் அவர் ஒரு பெண்ணிடம் அவமானப்படும் நேரத்தில் வெளிப்படுத்தும் நடிப்பு இருக்கிறதே… அடடா அடடா…
அ துவரை வெளிப்படுத்திய தற்கு நேர் மாறான நடிப்பு. ( இத்தனை சீக்கிரமாய் காலம் இவரை பறித் துக் கொண்ட கொடுமையை என் னென்பது…)
நீண்ட இடைவெளிக்குப் பின் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கும் கே.பாக்யராஜ், தன் இருப்பை அழுத்தமாகப் பதிவு செய்து விடுகிறார்.
அரசியல்வாதியாக அருள்தாஸ், காவல்துறை ஆணையராக தமிழ், சமுதாய ஆர்வலராக ஜாக் அருணாச்சலம், நாயகியின் தங்கையாக ஸ்வேதா டோரத்தி, சகோதரராக ரங்கா, தோழியாக நயனா ஆகியோரும் தங்கள் பொருத்தமான பாத்திரத் தேர்வை நடிப்பில் நிரூபிக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் இராமலிங்கத்தின் கேமரா வடசென்னைப் பகுதியை உள்ளும் புறமுமாய் கண்களுக்குள் கொண்டு வந்து விடுகிறது.
ஜிப்ரானின் பின்னணி இசை
படத்தின் டெம்போவை மேலும் கூட்டுகிறது.
எழுதி இயக்கிய ஜேபி, வடசென்னையை கதைக்களத்தில் இணைத்து இருப்பது தனி அழகு. போராடத் துணிந்து விட்டால் பெண்ணும் சீற்றமிகு புலிதான் என்பதை காட்சிப்படுத்திய விதம் இயக்குனருக்கு பெருமை சேர்க்கும். மார்ச்சுவரி சம்பந்தப்பட்ட அந்த கிளைமாக்ஸ் இயக்குனர் முத்திரை.
