சினி நிகழ்வுகள்சினிமா செய்திகள்தமிழக செய்திகள்

என்றும் ஒலிக்கும் பாடகர் எஸ்.பி.பி.யின் குரல்!


’தமிழா தமிழா நாளை நம் நாளே’’ என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘ரோஜா’ படத்தில் பாடகர் ஹரிஹரன் பாடிய இந்திய உணர்வும், தமிழ்மொழி உணர்வும் இணைந்து ததும்பும் அருமையான பாடலை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

இந்தப் பாடல் வெளிவந்தது 1992 ஆம் ஆண்டில்.
அதன்பிறகு மீண்டும் சுதந்திர தினத்தில் இன்று வெளியாகிற அதே பாடலைப் பல மொழிகளில் 65 முன்னணிப் பாடகர்கள் பாடியிருக்கிறார்கள்.
அபூர்வ இசைக்கலவையாக உருவாகியிருக்கிற இந்தப் பாடலின் முதல்வரியான ‘’ தமிழா தமிழா நாளை நம் நாளே’’ என்ற வரியை தன்னுடைய இளம் குரலால் முதலில் பாடியிருக்கிறார் பல சாதனைகளைப் படைத்த பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.

ஏற்கனவே 92 ஆம் ஆண்டில் இதே பாடலைப் பாடிய பாடகர் ஹரிஹரனும் மீண்டும் இந்தப் பாடலில் பாடி இணைந்திருப்பது சிறப்பு. யுனைட்டஃ சிங்கர்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் சார்பில் புதிய முயற்சியாக ‘’ டுகெதர் அஸ் ஒன்’’ என்ற தலைப்பில் இன்று வெளியாகி உள்ள இசைத் தொகுப்பை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லால், மெகா பவர் ஸ்டார் ராம் சரண் மற்றும் கன்னட நடிகர் யாஷ் அவர்களும் வெளியிட்டு இருக்கிறார்கள்.

பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடிப் பல தேசிய விருதுகளைப் பெற்றிருக்கிற மூத்த பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடித் துவங்கியிருக்கும் இந்தப் பாடல் அவருடைய கோடிக்கணக்கான ரசிகர்களை உற்சாகப்படுத்தும். மறுபடியும் அவருடைய மகத்தான குரலை உலக மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கும்.

மூத்த இசைக்கலைஞரான எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் குரல் என்றும் இதமானபடி நம் தேசத்தின் குரலாக ஒலிக்கட்டும்.
அவருடைய ரசிகர்கள் இந்தப் பாடலை உலகமெங்கும் கொண்டுபோய்ச் சேர்க்கட்டும்!

பாடல் இணைப்பு லிங்க்: bit.ly/TAOSongVideo

யுனைடெட் சிங்கர்ஸ் சாரிடபிள் ட்ரஸ்ட் (USCT) என்பது பிரபல பின்னனி பாடகர் திரு. ஶ்ரீநிவாஸ் அவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் . இதில் இவருடன் இனணந்து பாடகர்கள் திரு.உன்னிக்ருஷ்ணன் , திருமதி. சுஜாதா மோகன் , திரு. ராகுல் நம்பியார், திரு. ரஞ்சித் கோவிந்த் அவர்கள் அறங்காவலர்களாக பொறுபேர்கிறார்கள். இந்த ‘பான்டமிக்’ சமயத்தில் வாழ்வாதாரத்திற்காக கஷ்டப்படும் பாடகர்கள் மற்றும் இசை கலைஞர்களுக்கு நிதி திரட்டி உதவுவதே இந்த அமைப்பின் நோக்கம். USCT செப்டம்பர் மாதத்தில் உலக அளவில் நிதி திரட்டுவதற்காக ஆன்லைனில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடத்த உள்ளது.

எங்கள் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் , முயற்சிகளுக்கும் நீடித்த ஆதரவளித்து உறுதுனையாக நிற்கும் ஊடக நண்பர்கள் மற்றும் பத்திரிக்கையாளர் நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளை பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம். எங்களுடைய இந்த புதிய முயற்சிக்கு நீங்கள் தரப்போகும் பேராதரவை என்றென்றும் நாங்கள் மறக்க மாட்டோம்.

“டுகெதர் அஸ் ஒன்” பாடல் ஸ்ரீனிவாசுடன் இணைந்து ராகுல் நம்பியார் மற்றும் ஆலாப் ராஜு அவர்களால் வடிவமைக்கப்பட்டு வீடியோ LitBox Media Factory – ஆல் தொகுக்கப்பட்டுள்ளது.
Ishit Kuberkar இந்த பாடலை mixing and Mastering செய்திருக்கிறார் மற்றும் பாடல் வெளியீட்டை ஒருங்கினணத்து தருவது Silver Tree Talent Management, Chennai. Silver Tree கம்பெனி பிரசித்தி பெற்ற கலைஞர்களை மற்றும் திறமை வாய்ந்தவர்களை உலக அளவில் முக்கிய நிகழ்வுகளில் இனணத்திருக்கிறார்கள்.

Note : Exclusive rights of the song is owned by Lahari Music, T-series and Sony music.
For promotional purpose, the song can only be played on Television Satellite Channels only and not on any digital platform.
The television satellite channels has No Objection to play the track only for 10 days from 15th August to 24th August 2020.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *