என்னை வைத்து ரசிகர்களை ஏமாற்றாதீர்கள்- யோகிபாபு
சமீபகாலத்தில் ஒரு பெரிய நடிகருக்கு இணையாக கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் யோகிபாபு. காமெடியனாக வலம் வந்தாலும் அவர் கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார். அப்படி அவர் நடிக்கும் படங்கள் வெற்றி பெற்றும் வருகின்றன. அதனால் அவருக்கென பிஸ்னெஸும் இருக்கிறது. இதைச் சிலர் தவறாகப் பயன்படுத்தி வருவதாக நடிகர் யோகிபாபு வருத்தப்பட்டு வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
“நான் சில ஆண்டுகளுக்கு முன்பு சில படங்களில் இரண்டு மூன்று காட்சிகளில் நடித்திருக்கிறேன். இப்போது அப்படங்களை வெளியிடுபவர்கள் அந்தப்படங்களில் நான் ஹீரோவாக நடித்திருப்பது போல போஸ்டர் போட்டு வெளியிடுகிறார்கள். இதைப்பார்த்து தியேட்டருக்கு வரும் ரசிகர்களும் ஏமாந்து விடுகிறார்கள். சில விநியோகஸ்தர்களும் அந்தப் போஸ்டரை நம்பி படத்தை வாங்கி விடுகிறார்கள். அதனால் தயவுசெய்து நான் ஹீரோவாக நடிக்காத படங்களில் என் போட்டோவைப் பெரிதாகப் போட்டு போஸ்டர் அடிக்காதீர்கள்” என்று நடிகர் யோகிபாபு கூறியுள்ளார். அவர் சொல்லி இருப்பது நியாயம் தானே!