அருண் விஜய்யின் பாக்ஸர் படத்திற்கு சிக்கல்
அருண் விஜய்.. ஃபீல்டுக்குள் நடிக்க (மட்டுமே) வந்து 25 வருசமாச்சு.. தன் கோலிவுட் சில்வர் ஜூபிளி இயரை தனக்கு பிடிச்சவங்களுக்கு மிக்சி எல்லாம் கிஃப்டா கொடுத்து மகிழ்ச்சி அடைஞ்சவரிவர்..
கொரோனா லாக் டவுன் காலத்தில் கூட ரெண்டு நாளைக்கு ஒரு வீடியோ அல்லது ஸ்டில்லை உரிய ஆட்களை வச்சி பரவ விட்டுக்கிட்டே இருப்பவர்.
இப்போ ‘அக்னிச் சிறகுகள்’, ‘சினம்’, அறிவழகன் இயக்கி வரும் படம் ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் அருண் விஜய்.
ஆனா இந்தப் படங்களுக்கெல்லாம் முன்னாடி தொடங்கப்பட்ட படம் ‘பாக்ஸர்’. இதன் படப்பிடிப்பு திட்டமிட்டபடி தொடங்கப்படலை.
ஆனால், இந்தப் படத்தோட கதைக்காக ஃபாரினுக்கெல்லாம் போய் ஏதேதோ கலைகள் எல்லாம் கற்று உடலமைப்பை முழுமையாக மாத்தினார் இந்த அருண் விஜய்.
ஆனா திட்டமிட்டபடி ஷூட் தொடங்கப்படாததால், அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கிட்டார் அருண் விஜய். ‘
இச் சூழலில், நேற்று (ஜூன் 23) ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஹேமா ருக்மணி ‘பாக்ஸர்’ குறித்த முக்கியமான அப்டேட் வெளியிடவுள்ளார் என்று படக்குழுவினர் விளம்பரப்படுத்தினார்கள். இது சமூக வலைதளத்தில் பலரையும் ஆச்சரியப்படுத்தியது.அனைத்துப் பிரச்சினைகளும் சரியாகி படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது என்று பலரும் நம்பினார்கள்.
ஆனால், இன்று (ஜூன் 24) காலை அருண் விஜய் தனது ட்விட்டர் பதிவில் சிறிய கடிதமொன்றை வெளியிட்டு பாக்ஸர் டீமுடன் முரண்பட்டு இருப்பதை தெரிவிச்சிருக்கார் .
அதாவது “உங்களைப் போலவே நானும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கும் ‘பாக்ஸர்’ படம் குறித்து என்னிடம் உங்களில் பலர் கேட்டு வருகிறீர்கள். இந்தப் படத்துக்காக என்னைத் தயார்படுத்த நான் மிகவும் கடினமாக உழைத்து வந்தேன். ஆனால், இன்னும் முழுமையான படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை. உடலளவிலும் மனதளவிலும் அதிக முயற்சியும் உழைப்பும் இப்படத்துக்குத் தேவை என்பதால் அது குறிப்பிட்ட காலகட்டத்தில நடக்க வேண்டும். அது தயாரிப்பு நிர்வாகத்தின் தெளிவான அறிவிப்பால் மட்டுமே சாத்தியமாகும். எனவே இப்படம் குறித்த எனது அதிகாரபூர்வ அறிவிப்புக்காகக் காத்திருக்கவும். நன்றி” அப்படீன்னு அருண் விஜய் வெளியிட்டுள்ள கடிதாசில் தெரிவிச்சிருக்கா.
இக் கடிதத்தின் மூலம் ‘பாக்ஸர்’ படத்தில் சிக்கல் உருவாகியுள்ளது தெளிவாகிறது.
இப்போ இன்னிக்கு (ஜூன் 24) மாலை 5 மணியளவில் திட்டமிட்டப்படி ஹேமா ருக்மணி ‘பாக்ஸர்’ குறித்த அப்டேட் வருமா என்று பொருத்திருந்து பார்ப்போம்