அமேசான் ப்ரைம்’ல் மிகக் குறைந்தோரால் பார்க்கப்பட்ட படம் – பெண்குயின்
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஈஸ்வர் கார்த்திக் இயக்கி (?) இருந்த படம் ‘பெண்குயின்’. இப்படம் திரையரங்கில் வெளியாகாமல் நேரடியாக அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி மிகக் குறைந்தோரால் பார்க்கப்பட்ட படம் என்ற அந்தஸ்தை அடைந்துள்ளது..
இப்படத்துக்காக கீர்த்தி சுரேஷ் ஆறேழு நாள் சூம் வழியாக கண்ணுக்கு தெரியாத கொரோனா டைப்பில் வாழும் மீடியா(என்ற பேரில்) பேட்டி எல்லம் கொடுத்தும் பிக் அப் ஆகாத நிலையில் இப்போது ‘பெண்குயின்’ படத்தில் ‘சைரஸ்’ என்ற ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நாய் ஒன்று நடித்திருந்தது. இதற்காக தனது சொந்த நாயை நடிக்க வைத்துள்ளதாக இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் தெரிவிச்சு அது குறித்து அப்டேட் செய்து புரொமோட் செய்ய முயன்றுள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் பேங்க் எம்ப்ளாயீ-யும், பெண் குயின் மூலம் டைரக்டர் என்று சொல்லிக் கொள்பவர், ”அந்த நாயின் உண்மையான பெயர் மேடி. அது எனது சொந்த நாய். அதற்கு எனது உடல்மொழி நன்றாகத் தெரியும். அதன் நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும் நான் அறிவேன்.படத்துக்காகப் பயிற்சியளிக்கப்பட்ட நாய்களை நான் தேடிக் கொண்டிருந்தேன். ஆனால், என்னால் அப்படியான நாய்களைக் கண்டுபிடிக்கமுடியவில்லை. பட வேலைகள் தொடங்குவதற்கு சற்று முன்னர்தான் நான் மேடியைத் தேர்வு செய்தேன். அது மிகவும் அற்புதமாக நடித்திருந்தது. அதற்கு அதிக கட்டளையிட வேண்டிய தேவை ஏற்படவில்லை. அது இயல்பாகவே நடித்தது. அது எல்லாக் காட்சிகளையும் ஒரே டேக்கில் நடிச்சுது” – அப்பட்டீன்னு சொன்னதைக் கேட்டுக் கூட ஓடிடி-யில் பெண்குயின் பார்வையாளர் எண்ணிக்கை அதிகரிக்காததில் அமேசானே அப்செட் ஆகி விட்டதாம்