சினிமா செய்திகள்தமிழக செய்திகள்

திரைப்படப் பத்திரிகையாளர்களுக்கு உதவிய உள்ளங்கள்

  1. கொரோனா தாக்குதலால் உலகமே ஸ்தம்பித்து நிற்கும் நிலையில் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். மக்களின் துயர் துடைக்க சில நல்ல உள்ளங்கள் அவ்வப்போது உதவிகளைப் புரிந்து வருகின்றனர். அந்த வரிசையில் தமிழரசன் படத்தின் தயாரிப்பாளர் பெப்சி சிவா படத்தின் நாயகன் விஜய் ஆண்டனி உள்பட படக்குழு திரைப்பட பத்திகையாளர்களின் சூழ்நிலை அறிந்து அவர்கள் ஒவ்வொரு பேர்களுக்கும் ₹1100 ரூபாய் மதிப்புள்ள மளிகைப் பொருட்களை வழங்கி இருக்கிறார்.

மேலும் அவரைப் போலவே கட்டில் படத்தின் இயக்குநர் கணேஷ்பாபு பத்திரிகையாளர்களுக்கு சமையல் எண்ணெய் கொடுத்து உதவி இருக்கிறார். இப்படியான நேரத்தில் தமிழரசன் பட டீம் மற்றும் கட்டில் பட இயக்குநர் கணேஷ்பாபு செய்துள்ள உதவியை மனதாரப்பாராட்டுகிறது மீடியா உலகம்