சினிமா செய்திகள்நடிகர்கள்

அரசு அனுமதியின்றி வெளிநாடு சென்ற விஜய்

இயக்குனர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் உருவாகும் “மாஸ்டர்”-ல் விஜய் சேதுபதி, மாளவிகா மோஹனன் மற்றும் பலருடன் இணைந்து தளபதி விஜய் நடிச்சிருக்கார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பின் பொழுது இவரது வீட்டிலும் படப்பிடிப்பு நடக்கும் இடத்திலும் வருமானத் துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தினது டோட்டல் இண்ட்டஸ்ட்ரியில் அதிர்ச்சியைக் கொடுத்துச்சு.. ஆனா அதைக் கண்டிச்சு ஒருத்தர் கூட மவித்-தை ஓப்பன் பண்ணலை.

அப்ப இவர் இதற்கு முன் நடித்த பிகில் திரைப்படத்தில் இவர் வாங்கிய சம்பளத்திற்கு வரி ஏய்ப்பு செய்துவிட்டதாக நடந்த ரெய்டில் ஒன்றும் கண்டு பிடிக்கமுடியாததால் அப்செட்டாகி விட்டதா நூஸ் வந்துச்சு. இப்ப இந்த டோட்டல் ஒலகமே கொரோனாவால் பாதிக்கப்பட்ட நேரத்திலும் மறுபடியும் கவர்மெண்ட் ஆபீசர்கள் சில பேர் அவருடைய வீட்டிற்கு இன்று காலை விசிட் செஞ்சாய்ங்களாம்.

ஏன்னு கேட்டா ரெண்டு நாளைக்கு முன்னாடி விஜய் வெளிநாடு செல்வதுப்போல் ஒரு புகைப்படம் வெளியாச்சாம். அட்டடே. அரசு அனுமதியின்றி அவர் வெளிநாடு சென்றுவிட்டாரா என்று நோட்டம் விடுவதற்காக இந்த விசிட் செய்துள்ளதாக தகவல்கள் வருது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *