ப்ளான் ரெடி! ப்ளான் பண்ணிப் பண்ணும் டீம்

இன்று சென்னை சத்யம் தியேட்டரில் வெளியானது ப்ளான் பண்ணிப் பண்ணணும் படத்தின் பாடல்கள். பாடல்களை வெளியிட சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயன் வந்திருந்தார். பத்ரி வெங்கடேஷ் இயக்கியுள்ள இப்படத்தை ராஜேஷ், நந்தன் ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள். ரியோ நாயகனாகவும் ரம்யா நம்பீசன் நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் படத்தில் காமெடிக்கென பெரிய டீமே உள்ளன. ரோபோ சங்கர், தங்கதுரை, பால சரவணன், ஆகியோர் நடித்துள்ளதால் படம் சிரிக்க வைக்கப் போவது கன்பார்ம் என்கிறார்கள். விழாவில் பேசிய சிவகார்த்திகேயனும் படம் மீதான தன் நம்பிக்கையை வெளிப்படுத்தினார். சிவகார்த்திகேயன் உற்சாகப்படுத்தி இருப்பதால் படத்தை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்ல படக்குழு தயாராகி வருகின்றனர்
