சென்றவாரம் ஒரு ஜிப்ஸியின் காதல் கதையைக் கண்ட நமக்கு இந்தவாரம் ஒரு பூம் பூம் மாட்டுக்காரரின் காதல் கதை காணக்கிடைத்துள்ளது காதல் ஒன்றிற்குத் தானே பணம், தகுதி, தொழில் என்று என்றும் எதுவும் கிடையாது. அந்தவகையில் கயிறு படம் கதைக்களத்திலே பாதி வெற்றியை அடைந்துள்ளது.

பூம் பூம் மாட்டை வைத்து அருள்வாக்குச் சொல்லி வாழுபவர் படத்தின் ஹீரோ எஸ்.ஆர் குணா. அவருக்கு பிழைக்க வந்த ஊரில் காவ்யா மாதவ் மேல் காதல் வருகிறது. ஹீரோவின் தொழில் அக்காதலுக்கு தடையாக நிற்கிறது..உயிர் காதல் என்றால் என் தொழில் அதற்கும் மேல் என்கிறார் ஹீரோ. முடிவின் என்னானது என்பதே கயிறின் கதை..

நடிகர்களின் நடிப்பில் எதார்த்தம் மின்னுகிறது. எஸ்.ஆர் குணா நாயகனாக ஒரு அப்பாவித்தனத்தோடு ஈர்க்கிறார். நாயகி நம்ம ஊர்ப்பொண்ணு போன்ற லுக்கில் கவர்கிறார். ஏனைய கேரக்டர்களில் நடித்தவர்களும் ஏதோ நடித்தோம் என்பதில்லாமல் கேரக்டர்களுக்கு தோதான நடிப்பையே வழங்கி இருக்கிறார்கள். படத்தில் இசைக்கு பெரிய வேலை இல்லை. இசையும் பெரிதாக ஒர்க்கவுட் ஆகவில்லை. ஒளிப்பதிவு ரம்மியமாக இருக்கிறது. அந்த வகையில் கண்களுக்கு அது மகிழ்ச்சி.

காமெடி என்கிற பெயரில் வரும் சில காட்சிகளை இன்னும் கத்தரித்து இருக்கலாம். காதல் காட்சிகளில் கூட இன்னும் ஆழமும் அழுத்தமும் இருந்திருக்கலாம். படத்தில் முடிவில் சொல்லப்படும் ஒரு விசயம் உணர்வுப் பூர்வமானது. நம் பூர்வ குடிகளில் இருந்து இன்றுவுள்ள ஜெனரேசன் வரை மாடுகளை நாம் கடவுளுக்கு நிகராகப் பார்ப்பவர்கள். அதனால் மாடுகளைப்.பாதுகாப்பது மிக முக்கியம் என்று முடிவில் சொல்லிருப்பது நல்ல டச். அந்த ஒன்றிற்காகவே கயிறு படத்தை நாம் பார்க்கலாம்!

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2020/03/maxresdefault-1-1024x576.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2020/03/maxresdefault-1-150x150.jpgrcinemaசினி நிகழ்வுகள்சினிமா செய்திகள்தரவரிசைதிரை விமர்சனம்திரைப்படங்கள்சென்றவாரம் ஒரு ஜிப்ஸியின் காதல் கதையைக் கண்ட நமக்கு இந்தவாரம் ஒரு பூம் பூம் மாட்டுக்காரரின் காதல் கதை காணக்கிடைத்துள்ளது காதல் ஒன்றிற்குத் தானே பணம், தகுதி, தொழில் என்று என்றும் எதுவும் கிடையாது. அந்தவகையில் கயிறு படம் கதைக்களத்திலே பாதி வெற்றியை அடைந்துள்ளது. பூம் பூம் மாட்டை வைத்து அருள்வாக்குச் சொல்லி வாழுபவர் படத்தின் ஹீரோ எஸ்.ஆர் குணா. அவருக்கு பிழைக்க வந்த ஊரில் காவ்யா மாதவ் மேல்...