சினி நிகழ்வுகள்சினிமா செய்திகள்தமிழக செய்திகள்திரைப்படங்கள்

வெளிவரும் முன்பே பாசிட்டிவ் விமர்சனம்! காவல்துறை உங்கள் நண்பன்


பி.ஆர் டாகீஸ் காப்பொரேஷன், வைட் மூன் டாகீஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் காவல்துறை உங்கள் நண்பன். ஆர்.டி.எம் இயக்கியுள்ள இப்படத்தை தனஞ்செயன் வாங்கி வெளியிடுகிறார். வரும் வரும் 20-ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் பிரஸ்மீட் இன்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். படத்தைப் பற்றி தனஞ்செயன் பேசும்போது, “காவல்துறையில் உள்ள மேன்மை பற்றிப்பேசிய படங்கள் நிறைய வந்துவிட்டன. இந்தப்படம் காவல்துறையினரின் இன்னொரு முகத்தைக் காட்டும். இப்படத்தை லைவ் லொக்கேஷனில் மிக அழகாக எடுத்துள்ளார். சமீபத்தில் நான் பார்த்த படங்களில் இந்தப்படம் தான் மனநிறைவைத் தந்த படம்” என்றார்