மனிதனைப் போல நடந்து கொள்ளும் நாய். நாயைப் போல நடந்து கொள்ளும் மனிதன். இவர்கள் இருவருக்கும் நடக்கின்ற சுவாரசிய நிகழ்வுகள் தான் இந்த படத்தின் கதை. அதை காமெடி கலந்து முழுப்படத்தையும் கலகலப்பாக்கி இருக்கிறார்கள்.
விஞ்ஞானி ஜார்ஜ் மரியான், விலங்குகளை வைத்து மரபணு சோதனை நடத்தி வருகிறார். ஐ.டி கம்பெனியில் பணிபுரிந்து வரும் சதீஸ், ஜார்ஜ் மரியான் பக்கத்து வீட்டில் வசித்து வருகிறார். ஜார்ஜ் மரியான் வளர்த்து வரும் நாய் ஒன்று சதிஸை எதிர்பாராமல் கடித்து விடுகிறது.
இதிலிருந்து நாயின் குணாதிசயங்கள் சதீஸுக்கு வரத் துவங்குகிறது. இதனால், சதிஸின் வாழ்க்கையில் எதிர்பாராத பல பிரச்சனைகள். கைகூடிய காதல் கலைந்து போகிறது. நாயின் தன்மை வெளிப்பட்டதால் அலுவலகத்திலும் அவமானம். ஒருவழியாக மாற்று மருந்து தயாரான நிலையில் கடித்த நாய் காணாமல் போகிறது. காணாமல் போன நாய் கிடைத்ததா.? சதிஸ் மீண்டும் மனித இயல்புக்கு வந்தாரா? என்பதை சிரிக்கச்சிரிக்க சொல்லியிருக்கிறார்கள்.
காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வந்த சதிஸ் இந்தப் படத்தில் நாயகனாக புரமோஷன் ஆகியிருக்கிறார். காமெடியில் சிரிக்க வைப்பவர், சென்டிமென்ட், காட்சிகளிலும் ‘டச்’ ஆகிறார். நடனக்காட்சியிலும் ஆச்சரியப்படுத்துகிறார். நாயகி பவித்ரா லட்சுமியுடனான காதல் காட்சிகளிலும் ‘அடடே’ சொல்ல வைக்கிறார். நாயின் குணாதிசயங்கள் வந்தபிறகு பிஸ்கட்டுக்காக தாவும் இடத்தில் நடிப்பில் இன்னும் ஒரு படி மேலேறுகிறார்.
நாயகியாக வரும் பவித்ரா லட்சுமி அழகிலும் நடிப்பிலும் ஒருசேர ஜொலிக்கிறார். சதிசை காதலனாக தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தை தோழியிடம் இவர் சொல்லும் இடத்தில் காதலும் வெட்கமும் பூத்த அந்த புன்னகைக்கு ரசிகர்கள் சொக்கிப்போவார்கள்.
படத்தின் இன்னொரு நாயகனாகவே வருகிறது, கதைக்கு திருப்புமுனை தரும் அந்த நாய். நடிகர் சிவாவின் குரல் வேறு அதற்கு ‘பிளஸ்’சாகிப் போக, நாயின் சாகச நேரங்களில் விழுந்து விழுந்து ரசிக்கிறார்கள், சிறார்கள். நாய் போலீஸ் ஜீப்பை ஒட்டும்போது அரங்கில் குதூகலிக்கிறார்கள், குழந்தைகள்.
நாயகியின் அப்பாவாக வந்து ‘நாய்’ சேகரிடம் கடிபடும் இடத்தில் இளவரசு அட்டகாச எக்ஸ்பிரஷனில் தெறிக்க விடுகிறார். நாயகனின் பெற்றோராக பேராசிரியர் ஞானசம்பந்தம்-நித்யா சிறப்பு. குறிப்பாக குழப்ப நிலையில் இருக்கும் மகனிடம் ஒரு அப்பாவாக ‘உனக்கு நானிருக்கிறேன்’ என்று இதம் காட்டும் இடம், நடிப்புச்சோறு பதம்.
காமெடி போலீஸ் அதிகாரி ஸ்ரீமன் சிரிக்க வைக்க, இன்னொரு போலீஸ் அதிகாரி லிவிங்ஸ்டன், மனோபாலா, விஞ்ஞானி ஜார்ஜ் மரியம் தங்கள் கேரக்டர்களில் கம்பீரமாய் நின்று போகிறார்கள். காமெடி வில்லனாக அறிமுகமாகியிருக்கும் இசையமைப்பாளர் சங்கர்கணேஷ், அதிரி புதிரி அமளிதுமளியால் காமெடி துவம்சம் செய்கிறார். எதிரிகளை பாடியே வதம் செய்யும் இவரது நடிப்பு நம்மை ‘சிரிக்க வைத்தே கொல்லுதய்யா…’ அவரது உதவியாளராக வரும் லொள்ளுசபா மாறன் அடிக்கிற கவுண்டர் ஒவ்வொன்றும் தவுசண்ட் வாலா வெடி.
படத்தை இயக்கியதோடு மட்டுமில்லாமல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவும் செய்திருக்கிறார் இயக்குனர் கிஷோர் ராஜ்குமார். நாயகனை நாய் கடித்ததில் இருந்து தொடங்கும் வேகம் ஸ்பீடு பிரேக் இல்லாமல் முடிவு வரை சிரிக்க வைக்கிறது. இசையும் ஒளிப்பதிவும் இந்த நாய் சேகருக்கு கூடுதல் அலங்காரம்.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2022/01/86262500-1024x768.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2022/01/86262500-150x150.jpgrcinemaதிரை விமர்சனம்மனிதனைப் போல நடந்து கொள்ளும் நாய். நாயைப் போல நடந்து கொள்ளும் மனிதன். இவர்கள் இருவருக்கும் நடக்கின்ற சுவாரசிய நிகழ்வுகள் தான் இந்த படத்தின் கதை. அதை காமெடி கலந்து முழுப்படத்தையும் கலகலப்பாக்கி இருக்கிறார்கள். விஞ்ஞானி ஜார்ஜ் மரியான், விலங்குகளை வைத்து மரபணு சோதனை நடத்தி வருகிறார். ஐ.டி கம்பெனியில் பணிபுரிந்து வரும் சதீஸ், ஜார்ஜ் மரியான் பக்கத்து வீட்டில் வசித்து வருகிறார். ஜார்ஜ் மரியான் வளர்த்து வரும் நாய்...