எழுத்தாளரான அவந்திகாவை பெண் பார்க்கச் செல்கிறார், அஸ்வின். அவரோ தனக்கு வரப் போகும் கணவன் ஏற்கெனவே ஒரு பெண்ணைக் காதலித்தவராக இருக்க வேண்டும் என்க, பிடித்த பெண்ணை விட்டு விடக்கூடாது என்ற நினைப்பில் தனக்கு ஒரு காதலி இருந்ததாக கதை விடுகிறார், அஸ்வின். ‘அப்படியானால் அந்த காதலியை நான் பார்க்க வேண்டுமே’ என அவந்திகா கேட்க, வேறுவழியின்றி தனது கற்பனைக் காதலியைத் தேடி அலைகிறார். அப்போது தேஜு அஸ்வினியை சந்திக்கும் அஸ்வின், அவரை தனது வருங்கால மனைவியிடம் தனது முன்னாள் காதலியாக நடிக்குமாறு கோரிக்கை விடுக்கிறார். பெரும் தயக்கத்துக்குப் பிறகு தேஜூவும் ஒப்புக் கொள்ள…

இங்கே திடீர் திருப்பம். ஒரு கட்டத்தில் அஸ்வினுக்கு தேஜூ மீதே காதல் வந்து விடுகிறது.

இப்போது முதலில் பார்த்த பெண்ணா? இடையில் பார்த்்த பெண்ணா… நாயகன் யாரை மணந்து கொள்கிறார் என்பது இளமை பிளஸ் இழுவை திரைக்கதை.
நாயகனாக அஸ்வினுக்கு இது முதல் படம். பெரிதாக குறை சொல்லமுடியாத நடிப்பை வழங்கி ஆச்சரியப்படுத்துகிறார்.
நாயகிகள் அவந்திகா, தேஜு அஸ்வினி இருவருக்குமே கனமான பாத்திரம். ஆனாலும் தேறி விடுகிறார்கள். காமெடிக்கு புகழ். இவருக்கு புகழ் சேர்க்கும் விதத்தில் காமெடி அமையவில்லை என்பது சிறுகுறை. கொஞ்ச நேரமே வந்தாலும் டெல்லி கணேஷ் ஆசம்.
ஹரிகரன் இயக்கி இருக்கிறார். முதல் பாதியில் தேஜு அஸ்வினி-அஸ்வின் இடையில் காதல் மலரும் காதலை அருமையாக காட்சிப்படுத்தியிருந்தவர், பிற்பகுதியில் தான் ஏகத்துக்கும் சொதப்பி விட்டார். தன்னுடைய இதயம் சொல்வதை மட்டுமே கேட்கும் நபர் என்று அறிமுகமாகும் அஸ்வினை இரண்டாம் பாதி முழுக்க தடுமாற்றமான ஆளாகக் காட்டியிருக்கிறார். கதைப்படி முதலில் அஸ்வினுக்குஅவந்திகாவைப் பிடித்திருக்க, அதன் பிறகு தேஜூ. இரண்டாம் பாதியில் மீண்டும் அவந்திகா வசம் மனம் போகிறது. கடைசியில் அவந்திகாவே திருமணத்தை நிறுத்தியதால் மட்டுமே தேஜூவை தேடிச் செல்கிறார். இப்படி அஸ்வினின் பாத்திர வடிவமைப்பிலே காணப்படும் ஏகப்பட்ட முரண்பாடுகளை சரி செய்திருக்கலாம்.
விவேக் – மெர்வினின் இசையில் ‘க்யூட் பொண்ணு,’ ‘நீதானடி’ பாடல்களில் பறக்கிறது, இளமைக்கொடி. ரிச்சர்ட் எம்.நாதனின் ஒளிப்பதிவு இந்த முக்கோணக் காதல் கதைக்கு கிடைத்த அறுங்கோணம்.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2022/01/b1cef3facd06109abfa5d9d78f7910da.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2022/01/b1cef3facd06109abfa5d9d78f7910da-150x150.jpgrcinemaதிரை விமர்சனம்எழுத்தாளரான அவந்திகாவை பெண் பார்க்கச் செல்கிறார், அஸ்வின். அவரோ தனக்கு வரப் போகும் கணவன் ஏற்கெனவே ஒரு பெண்ணைக் காதலித்தவராக இருக்க வேண்டும் என்க, பிடித்த பெண்ணை விட்டு விடக்கூடாது என்ற நினைப்பில் தனக்கு ஒரு காதலி இருந்ததாக கதை விடுகிறார், அஸ்வின். ‘அப்படியானால் அந்த காதலியை நான் பார்க்க வேண்டுமே’ என அவந்திகா கேட்க, வேறுவழியின்றி தனது கற்பனைக் காதலியைத் தேடி அலைகிறார். அப்போது தேஜு அஸ்வினியை...