‘ஆனந்தம்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் லிங்குசாமி. பல வெற்றிப் படங்களை கொடுத்த இவர் முதன்முறையாக தமிழ் – தெலுங்கு என இரண்டு மொழிகளில் இயக்கும் படம் இது.

தெலுங்கில் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான ‘ராம் பொத்னேனி’ ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் படத்துக்கு தற்போது ‘தி வாரியர்’ என்ற டைட்டிலை அறிவித்து பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறார்கள்.

போலீஸ் டிபார்ட்மெண்ட் பின்னணியில் நடக்கும் இந்த கதையில், ராம் பொத்னேனி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். நடிகர் ஆதி இதில் முரட்டுத்தனமான வில்லனாக நடிக்கிறார்.

ராம் பொத்னேனி முதல் முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கும் படம் என்பதால் இப்படம் ஏகத்துக்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன்’ பேனர் சார்பில் ஸ்ரீனிவாசா சித்தூரி – பவன் குமார் இருவரும் மிகப் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கிறார்கள். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகும் இந்தப் படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. கடந்த ஆண்டு வெளியாகி பிளாக் பஸ்டர் வெற்றியைத் தந்த ‘சீட்டிமார்’ படத்தைத் தொடர்ந்து வரும் படம் என்பதால் ரசிகர்களிடமும் பெரிய உந்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘கிருத்தி ஷெட்டி’ நாயகியாக நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் அக்ஷரா கவுடா நடிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை அமைக்கிறார். சென்னையில் பிறந்து வளர்ந்த ராம் பொத்தினேனி இந்த படடம மூலம் தமிழிலும் நாயகனாக ஒரு ரவுண்டு வருவார் என்கிறார்கள்.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2022/01/157db857-cc20-421a-882e-6a0f743ae60f-1024x722.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2022/01/157db857-cc20-421a-882e-6a0f743ae60f-150x150.jpgrcinemaசினி நிகழ்வுகள்‘ஆனந்தம்' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் லிங்குசாமி. பல வெற்றிப் படங்களை கொடுத்த இவர் முதன்முறையாக தமிழ் - தெலுங்கு என இரண்டு மொழிகளில் இயக்கும் படம் இது. தெலுங்கில் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான 'ராம் பொத்னேனி' ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் படத்துக்கு தற்போது ‘தி வாரியர்’ என்ற டைட்டிலை அறிவித்து பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டு ரசிகர்களை...