தெலுங்கில் தருண் பாஸ்கர் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா-ரீத்து வர்மா நடிப்பில் வெளியான ‘பெல்லி சூப்புலு’ படமே தமிழில் ‘ஒ மணப்பெண்ணே.’ ஆகியிருக்கிறது.

பெண் பார்க்கப்போகும் என்ஜினியரிங் பட்டதாரி இளைஞன் கார்த்திக்கின் குடும்பம் முகவரி மாறி வேறொரு பெண் வீட்டுக்குப் போய் விட…அதனால் ஏற்படும் முன்பின்னான விளைவுகளை சுவாரசியம் ததும்ப தந்த விதத்தில் படம் நிமிர்ந்து நிற்கிறது.

‘எதிர்காலம் பூஜ்யமோ’ என்ற கேள்விக்குறியுடன் வலம் வரும் கார்த்திக்கின் கடைசி அஸ்திரம், வசதியான குடும்பத்தில் வீட்டோடு மாப்பிள்ளையாவது. அப்படி அந்த வசதியான தொழில் அதிபர் வீட்டுக்்குப் போனபோது தான் முகவரி மாறி, எல்லாமே மாறுகிறது. முதலில் பார்த்த ஸ்ருதி ஏற்கனவே ஒரு காதலில் அடிபட்டதையும் இப்போதைக்கு திருமணம் தவிர்த்து மேற்படிப்புக்காக ஆஸ்திரேலியா செல்வதே தனது லட்சியம் என்றும் சொல்ல…

கோடீசுவர தொழில் அதிபரோ அவனிடம் ‘ஏதாவது ஒரு தொழிலில் ஜெயித்துக் காட்டு. அதன்பிறகு உன்னை என் வீட்டு மாப்பிள்ளையாக்குவது பற்றி யோசிக்கிறேன்’ என்க…

இப்போது முதலில் முகவரி மாறி பார்க்கப்போன பெண் ஸ்ருதி கைகொடுக்கிறாள். அவனின் ‘செப்’ கனவை தெரிந்து கொண்டவள் அவனுடன் இணைந்து நடமாடும் உணவகம் தொடங்குகிறாள். சில பல தடைகளைக் கடந்து அவர்கள் தொழில் கூட்டணி ெஜயிக்க.. இ்ப்போது கோடீசுவர் தன் மகளை தர முன்வருகிறார்.

இப்போது கார்த்திக் என்ன முடிவெடுக்கிறான்? தொழில் கூட்டணி காதல் கூட்டணியாக மாறியதா? இல்லையேல் கோடிக்கனவு அவனை பணக்கார வீட்டு மாப்பிள்ளையாக்கியதா? என்பது பரபரப்பு பிளஸ் விறுவிறுப்பு கிளைமாக்ஸ்.

கார்த்திக் கேரக்டரில் ஹரீஷ் கல்யாண் நன்றாகப் பொருந்துகிறார். வெட்டி ஆபீசராக நண்பர்களுடன் சுற்றித்திரிவது, அவ்வப்போது அதற்காக அப்பாவிடம் ‘பாட்டு வாங்குவது’ என்று அந்த கேரக்டர் காரத்திக்கோடு அப்படி இணைந்து ஒட்டிக் கொள்கிறது. ஸ்ருதியின் பழைய காதலன் வந்ததை ஸ்ருதி சொல்ல, அதற்கு இவரது ரியாக்ஷன் வேற லெவல். உழைப்பின் உன்னதம் உணர வைத்த ஸ்ருதியை சாதாரணமாக எடை போட்டு விட வேண்டாம் என்று அவளது தந்தை கே.எஸ்.ஜி.வெங்கடேசுக்கு எடுத்துச் சொல்லும் இடத்தில் தேர்ந்த நடிப்பில் நிமிர்ந்து நிற்கிறது அந்த கேரக்டர்.

ஸ்ருதியாக வரும் பிரியாபவானி சங்கர் அந்த கேரக்டரை உள்வாங்கி வெளிப்படுவது தனி அழகு. அப்பாவிடம் கருத்து பேதம், கார்த்திக்கின் தொழில் கவனமின்மைக்காக கோபம் என காட்சிக்கு காட்சி நடிப்பில் வசீகரிக்கிறார். கார்த்திக்கின் கண்டிப்பான அப்பாவிடம் மகனின் சிறப்பு சொல்லி அவரை மாற்றும் இடத்தில் ‘ஸ்ருதி பிசகாத’ அந்த நடிப்பு ‘ஆஹா’ ரகம்.

கார்த்திக் அப்பாவாக வரும் வேணு அரவிந்த், அந்த நடுத்தர குடும்பத்து அப்பாவாக காட்சிகளில் வாழ்ந்திருக்கிறார்.. கணவரை கோபிக்க ‘டேய்’ போடும் அந்த அம்மாவும் அசத்தல்.

நண்பர்களாக வரும் அன்புதாசன், அபிஷேக்குமார் காமெடியில் சரவெடி சப்தம் அதிகம்.. ஸ்ருதியின் முன்னாள் காதலர் அஸ்வின் வந்த கொஞ்ச நேரத்திலும் மனதில் பதிந்து போகிறார்.விஷால் சந்திரசேகர் இசையும், கிருஷ்ணன் வசந்தின் ஒளிப்பதிவும் படத்தின் பெரிய பலம்.
வெற்றி பெற்ற ரீமேக் கதையை அதன் இயல்பு மாறாமல் ரசிக்க வைத்த இயக்குனர் கார்த்திக் சுந்தர், இந்த மணப் பெண்ணை நன்றாகவே அலங்கரித்திருக்கிறார்.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2021/10/12073146363.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2021/10/12073146363-150x150.jpgrcinemaசெய்திகள்திரை விமர்சனம்தெலுங்கில் தருண் பாஸ்கர் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா-ரீத்து வர்மா நடிப்பில் வெளியான 'பெல்லி சூப்புலு' படமே தமிழில் ‘ஒ மணப்பெண்ணே.’ ஆகியிருக்கிறது. பெண் பார்க்கப்போகும் என்ஜினியரிங் பட்டதாரி இளைஞன் கார்த்திக்கின் குடும்பம் முகவரி மாறி வேறொரு பெண் வீட்டுக்குப் போய் விட...அதனால் ஏற்படும் முன்பின்னான விளைவுகளை சுவாரசியம் ததும்ப தந்த விதத்தில் படம் நிமிர்ந்து நிற்கிறது. ‘எதிர்காலம் பூஜ்யமோ’ என்ற கேள்விக்குறியுடன் வலம் வரும் கார்த்திக்கின் கடைசி அஸ்திரம், வசதியான குடும்பத்தில்...