திருநங்கைகள் பற்றி இதுவரை சொல்லப்படாத கதை.
திருநங்கைகள் விஜி, சாந்தி, டோரா ஆகிய மூன்று பேரும் நட்புடன் பழகி வருகிறார்கள். இவர்களில் விஜி கொலைக்கு அஞ்சாதவர். திருநங்கைகளுக்கு ஒரு அவமானம் என்றால் அடுத்த கணம் அதிரடி தடாலடி என சீறிப்பாய்வார். இந்த விஜி கூலிக்கு கொலை செய்வதை தொழிலாக செய்து வருவதால் ஏற்படும் விளைவுகளே படத்தின் மீதிக்கதை
விஜியாக நடித்துள்ள விஜயபாஸ்கரே படத்தை இயக்கியும் இருக்கிறார். சக தோழிகள் மீது அவர் காட்டும் பாசம், தங்களைச் சார்ந்தவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு முதல் ஆளாக முன்னிற்கும் வேகம் என கதையின் மைய பாத்திரமாக வாழ்ந்திருக்கிறார்.

டோரா, சாந்தி கதாபாத்திரங்களின் இயல்பான நடிப்பும் கதையோடு நம்மை ஐக்கியப்படுத்தி விடுகிறது.
தமிழ் சினிமாவில் திருநங்கைகளைப் பற்றி இவ்வளவு வெளிப்படையான ஒரு படம் வந்ததில்லை. சமூகத்தில் தங்களைப் புறக்கணிக்கும் மனிதர்கள் மீது கோபத்தில் கொந்தளிக்கும் விஜி ஒருபக்கம். போகப்பொருளாக மட்டுமே பார்க்கப்பட்டதால் பாதிக்கப்படும் சாந்தி இன்னொரு பக்கம். பெண் உணர்வு தோன்றியதால் வீட்டிலிருந்து துரத்தப்பட்ட டோரா மற்றொரு புறம் என ஒட்டு மொத்த திருநங்கைகளின் உணர்வுகளை இயல்பு மீறாமல் சொல்லியிருக்கிறார் இயக்குனர் விஜயபாஸ்கர்.

திருநங்கைகள் அன்றாட போராட்ட வாழ்வை சொல்லும் படத்தில் அவர்களை கூலிக்கு கொலை செய்யும் அடியாள் ரேஞ்சுக்கு காட்டியது மட்டும் இந்த மூன்றாம் பாலினக்கதையில் விழுந்த சிறு கீறல். மற்றபடி பரணிகுமாரின் ஒளிப்பதிவும் ஹூமன் எழிலனின் இசையும் ரசிகனை திருநங்கைகள் உலகிற்கே கொண்டு செல்வதில் வெற்றி பெற்று விடுகின்றன.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2021/10/cce2c8a6-351a-4e50-b321-42600cfab7bd-1024x682.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2021/10/cce2c8a6-351a-4e50-b321-42600cfab7bd-150x150.jpgrcinemaதிரை விமர்சனம்திருநங்கைகள் பற்றி இதுவரை சொல்லப்படாத கதை. திருநங்கைகள் விஜி, சாந்தி, டோரா ஆகிய மூன்று பேரும் நட்புடன் பழகி வருகிறார்கள். இவர்களில் விஜி கொலைக்கு அஞ்சாதவர். திருநங்கைகளுக்கு ஒரு அவமானம் என்றால் அடுத்த கணம் அதிரடி தடாலடி என சீறிப்பாய்வார். இந்த விஜி கூலிக்கு கொலை செய்வதை தொழிலாக செய்து வருவதால் ஏற்படும் விளைவுகளே படத்தின் மீதிக்கதை விஜியாக நடித்துள்ள விஜயபாஸ்கரே படத்தை இயக்கியும் இருக்கிறார். சக தோழிகள் மீது அவர்...