ஜெய் பீம் என்பது அனைத்து முரண்பாடுகளுக்கும் எதிராக எழுந்து ஒடுக்கப்பட்டவர்களுக்கான நீதிக்காக போராடிய ஒரு மனிதனின் பயணம். நடிகர் சூர்யா தலைமையிலான ஜெய் பீம் இந்த தீபாவளிக்கு இந்தியா மற்றும் 240 நாடுகளில் உள்ள ப்ரைம் மெம்பர்களுக்காக வருகிற நவம்பர்-2-ந்தேதி அன்று தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியாகிறது. இதையொட்டி ஜெய் பீம் படத்தின் ட்ரெய்லரை ப்ரைம் வீடியோ இன்று வெளியிட்டது.

தா.செ.ஞானவேல் எழுதி இயக்க, முக்கிய கேரக்டர்களில் பிரகாஷ்ராஜ், ராவ் ரமேஷ், ரெஜிஷா விஜயன், மணிகண்டன், லிஜோ மோல் ஜோஸ் இருக்கிறார்கள். 2டி எண்டர்டெயின்மெண்ட் பேனரில் சூர்யா மற்றும் ஜோதிகா தயாரித்துள்ளனர். ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் இணைந்து தயாரிக்க, இசையமைத்திருக்கிறார் ஷான் ரோல்டன்.
இந்த படத்தின் பின்னணியில் உள்ள குழுவில் ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிர், எடிட்டர் பிலோமின் ராஜ் மற்றும் கலை இயக்குநர் கதிர் ஆகியோர் அடங்குவர்.
1990-களில் தமிழ்நாட்டில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட கதை இது. செங்கேனி மற்றும் ராஜகண்ணு என்ற பழங்குடி ஜோடியில் வாழ்க்கைக்குள் நம்மை அழைத்துச் செல்கிறது, படம். ராஜகண்ணு பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டு பின்னர் போலீஸ் காவலில் இருந்து காணாமல் போகும்போது அவர்களின் உலகம் சிதறுகிறது. செங்கேனி தனது கணவனைத் தேடும் முயற்சியில் வழக்கறிஞர் சந்துருவின் உதவியை நாடுகிறார். இப்போதாவது நீதி கிடைக்கிறதா என்பது விறுவிறு திரைக்களம்.
நடிகர் சூர்யா தான் ஏற்ற வழக்கறிஞர் சந்துரு கேரக்டர் பற்றி விவரிக்கையில், ‘‘இந்த கதாபாத்திரத்தை படத்தில் சித்தரிப்பதில் நான் நியாயம் செய்திருப்பேன் என்று நம்புகிறேன்’‘ என்றார்.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2021/10/1c1385a4-f049-490f-b8e3-ec161b70335c-724x1024.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2021/10/1c1385a4-f049-490f-b8e3-ec161b70335c-150x150.jpgrcinemaசினிமா செய்திகள்ஜெய் பீம் என்பது அனைத்து முரண்பாடுகளுக்கும் எதிராக எழுந்து ஒடுக்கப்பட்டவர்களுக்கான நீதிக்காக போராடிய ஒரு மனிதனின் பயணம். நடிகர் சூர்யா தலைமையிலான ஜெய் பீம் இந்த தீபாவளிக்கு இந்தியா மற்றும் 240 நாடுகளில் உள்ள ப்ரைம் மெம்பர்களுக்காக வருகிற நவம்பர்-2-ந்தேதி அன்று தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியாகிறது. இதையொட்டி ஜெய் பீம் படத்தின் ட்ரெய்லரை ப்ரைம் வீடியோ இன்று வெளியிட்டது. தா.செ.ஞானவேல் எழுதி இயக்க, முக்கிய கேரக்டர்களில் பிரகாஷ்ராஜ்,...