திரை விமர்சனம்

நிர்வாகம் பொறுப்பல்ல – திரை விமர்சனம்

நாயகன் கார்த்தீஸ்வரன், பல வழிகளில் மோசடி செய்து ரூ.5 ஆயிரம் கோடி சம்பாதிக்கிறார். அந்த பணத்தை எடுத்துக் கொண்டு வெளிநாட்டுக்கு பறந்து விட
திட்டமிட்ட நேரத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீநிதியிடம் தொக்காக சிக்கிக் கொள்கிறார்.
போலீஸிடம் சிக்கிக் கொண்ட கார்த்தீஸ்வரன் செய்த மோசடிகள் என்ன? அதை அவர் எப்படி சாமர்த்தியமாக செய்தார்? அவர் இப்படி செய்வதற்கு என்ன காரணம் ? கேள்விகளுக்கான விடை பரபர கிளை மாக்ஸ்.
படத்தை இயக்கியிருக்கும் எஸ்.கார்த்தீஸ்வரன் கதையின் நாயகனாகவும் நடித்திருக்கிறார். அப்பாவி முகம், சாதுவான தோற்றம் என்று சாதாரணமாக வலம் வரும் கார்த்தீஸ்வரன் செய்யும் மோசடிகள் அனைத்தும் அடப்பாவி ரகம். கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கும் கார்த்தீஸ்வரன், பலவித கெட்டப்புகளில் தோன்றி ஆச்சரியப் படுத்துகிறார். நடிப்பு, நடனம், காமெடி, ஆக்‌ஷன் என அனைத்திலும்
பட்டை கிளப்பியி ருக்கிறார்.
போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஸ்ரீநிதி அழகும் கம்பீரமும் இணைந்த கலவையாக வசீ கரிக்கிறார்.
கார்த்தீஸ்வரனின் மோசடி குழுவில் இருக்கும் ஆதவன் அவ்வப்போது சிரிக்க வைக்கிறார். லிவிங்ஸ்டன், பிளாக் பாண்டி, மிருதுலா சுரேஷ், அகல்யா வெங்கடேசன் பொருத்தமான பாத்திரத் தேர்வில் கதையோட்டத்துக்கு உதவுகிறார்கள்.
ஒளிப்பதிவாளர் என்.எஸ்.ராஜேஷின் கேமரா காட்சிகளை கண்களுக்கு நிறை வாக்குகிறது.
ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் கொண்டாட்டம். பின்னணி இசையும்
அமர்க்களம்.
எழுதி இயக்கியிருக்கும் எஸ்.கார்த்தீஸ்வரன், மிக குறைந்த விலையில் ஸ்மார்ட் போன் தருவதாக கூறி கார்ப்பரேட் நிறுவனம் மூலம் நடத்திய மோசடி முதல் தற்போது நடக்கும் ஆன்லைன் மோசடிகள் வரை, அனைத்து விதமான மோசடிகளையும் பொருத்தமான காட்சியமைப்பில் சிறப்பாகவே தந்திருக்கிறார்.
பல வழிகளில், பலர் ஏமாற்றப்பட்டு வருவது தொடர்பாக செய்திகள் வெளியானாலும், மக்கள் ஏமாறுவதும், அவர்களை தொடர்ந்து ஏமாற்றுவதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இதற்கு காரணம் என்ன ? என்பதை காரண காரியங்களோடு கமர்ஷியலாக காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநர் எஸ்.கார்த்தீஸ்வரன், இத்தகைய மோசடிகளில் சிக்காமல் இருக்க மக்கள் என்ன செய்ய வேண்டும், என்பதையும் சொல்லியிருப்பது சிறப்பு. கிளைமாக்ஸ் நிஜமாகவே எதிர்பாராத திருப்பம்.
மொத்தத்தில் படம் இன்னொரு சதுரங்க வேட்டை எனலாம்.