சாதனைப் பெண்களுக்கு விருது வழங்கிய நடிகை ஜெயசித்ரா! உணர்வுபூர்வ உரை நிகழ்த்தி பெருமிதம்!
பெண்கள் தினத்தை முன்னிட்டு சாதனை படைத்த பெண்களுக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது. அதில் நடிகை, இயக்குனர் கலைமாமணி டாக்டர். ஜெயசித்ரா அவர்கள் கலந்து கொண்டார். அவர் தன்னுடைய திரையுலக வாழ்க்கை பற்றியும் தன்னுடைய விருதுகள் பற்றியும் பெண்களின் சாதனைகளின் அத்யாவசியம் பற்றியும் அவர் பேசியிருந்தார்.
முதலில் நான் திரைத்துறையில் ஈடுபாடு இல்லாமலே இருந்தேன் ஆனால் பொண்ணுக்கு தங்க மனசு படம் மூலம் நான் வாழ்வில் ஜெயித்தாக வேண்டும் என்ற உத்வேகத்தை வளர்த்து கொண்டேன். அனைத்து மேலும் இந்த விழாவை 45 ஆண்டுகளாக நடத்தி வரும் என் அன்பு சகோதரர் பாபுவுக்கே இந்த பெருமை போய் சேர வேண்டும் எனவும் அவர் கூறினார். மேலும் கடினமாக உழைக்கும் அனைவருக்கும் அவரவரின் வெற்றி கைவசம் வரும். இந்த விருது ஒரு துவக்கம் மட்டுமே. வெற்றிப் பாதையில் செல்லும் பெண்களுக்கு இது ஒரு முதல் படி என உணர்வுபூர்வமாக பேசினார் இயக்குனர் கலைமாமணி டாக்டர் ஜெயசித்ரா.