‘சின்னஞ்சிறு கிளியே’ படத்துக்கு பாராட்டோடு யூ சர்டிஃபிகேட்!
செண்பா கிரியேஷன்ஸ் செந்தில்நாதன் தயாரிப்பில், சபரிநாதன் முத்துப்பாண்டியன் இயக்கத்தில் தயாரான படம் ‘சின்னஞ்சிறு கிளியே.’ இந்த படம் நேற்று சென்ஸார் செய்யப்பட்டது.
தந்தைக்கும் மகளுக்கும் இடையேயான பாசத்தை அழகியலோடு உணர்த்தும் விதமாகவும் அமைந்துள்ளது இப்படம். தவிர, ஆங்கில மருத்துவத்தின் விளைவுகளையும் இப்படம் எடுத்துச் சொல்கிறது. ஆகவே, இந்த காலகட்டத்திற்கு தேவையான படம் என்பதால் எந்தவொரு காட்சியையும், வசனத்தையும் கத்தரிக்காமல் யு சான்றிதழ் வழங்கப்பட்டது.
மஸ்தான் காதர் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். படம் விரைவில் திரைக்கு வருகிறது.