சினி நிகழ்வுகள்

லிங்குசாமியின் புதிய படத்தில் ராம் பொதினேனி & கீர்த்தி ஷெட்டி!

லிங்குசாமி, நடிகர் ராம் பொதினேனி கூட்டணியில் உருவாகும் RAPO19 படத்தில் நாயகியாக கீர்த்தி ஷெட்டி இணைந்துள்ளார்!

தெலுங்கு திரையுலகில் தொடர் வெற்றிகளால் அசத்தி வரும், துறுதுறுப்பான இளம் நடிகரான, ராம் பொதினேனி, தமிழ் சினிமாவின் மாஸ் கமர்ஷியல் கிங், சண்டக்கோழி (Pandemakodi), பையா (Awara), வேட்டை (Thadaka) படப்புகழ் இயக்குநர் லிங்குசாமியுடன் புதிய படத்தில் இணைந்திருக்கிறார்.

சில வாரங்களுக்கு முன் படத்தின் அறிவிப்பு வெளியான நிலையில், பிரபல இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி இப்படத்தில் நடிகர் ராம் பொதினேனி ஜோடியாக நடிக்கிறார் என்ற அறிவிப்பை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

RAPO19 திரைப்படம் முழுக்க முழுக்க, ஸ்டைலிஷ் ஆக்சன் கமர்ஷியல் படமாக உருவாகவுள்ளது. கமர்ஷியல் படங்களின் கிங் இயக்குநர் லிங்குசாமி தன் தனித்த முத்திரையில், ஸ்டைலிஷ் மாஸ் மசாலா படமாக இப்படத்தை உருவாக்குகிறார்.

மிகப்பெரும் பட்ஜெட்டில் பெரும் ஆளுமைமிக்க தொழில்நுட்ப கலைஞர்களுடன் மாஸ் ஆக்சன் படமாக RAPO19 படம் உருவாகிறது.

தயாரிப்பாளர் சித்தூரி ஶ்ரீனிவாசா Srinivasaa Silver Screen நிறுவனத்தின் சார்பில் 6 வது படைப்பாக இப்படத்தை தயாரிக்கிறார்.

படகுழுவினர் விபரம்

நாயகன் – ராம் பொதினேனி

நாயகி – கீர்த்தி ஷெட்டி

தயாரிப்பு நிறுவனம் – Srinivasaa Silver Screen

வழங்குபவர் – பவன் குமார்

தயாரிப்பாளர் – சித்தூரி ஶ்ரீனிவாசா

இயக்குநர் – N.லிங்குசாமி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *