‘ஆறா எனும் ஆரா.’ சஸ்பென்ஸ் திரில்லராக, பிரமாண்டமாக உருவாகிறது!
ஆக்ஷன் கலந்த சஸ்பென்ஸ் திரில்லராக, தமிழ் மற்றும் தெலுங்கில், பிரமாண்டமாக உருவாகி வரும் படம் ‘ஆறா எனும் ஆரா.’
இந்த படத்தை சாபு அவர்கள் சாபு பிக் டிவி பானரில் தயாரித்துள்ளார். அதன் இணை தயாரிப்பாளர் ஜோஸ். ஸ்டீபன்.ஜெ எழுதி இயக்க, அஷோக்குமார் கதாநாயகனாகவும், ஸ்வேதா ஜோயல் கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் நிழல்கள் ரவி, மனோபாலா, ஆனந்தராஜ், பில்லி, ஷைனி, ஷகிலா மற்றும் பலர் நடிக்கின்றனர்.
சுலக் ஷா டாடி இசையில், ரக்சகன் பாடல் வரிகள் எழுதியுள்ளார்.
தொடர்ந்து சென்னை மற்றும் பல இடங்களில் படப்பிடிப்பு நடத்தி, வெகு விரைவில் இரு மொழிகளிலும் திரைக்கு வரும் என தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.
படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள்:-
ஒளிப்பதிவு – ரவிசாமி
கலை இயக்கம் – சியோ ஜோஸ்
எடிட்டிங் – விபின்
புரொடக்ஷன் கன்ட்ரோலர் – செபாஸ்டியன்.ஜெ.
சண்டை காட்சி – ஜாக்கி ஜான்ஸன்
நடனம் – செல்வி
