சினி நிகழ்வுகள்

‘கால்ஸ்’ சினிமா விமர்சனம்

சின்னத்திரையின் புகழ் வெளிச்சத்தின் உச்சத்தில் இருந்து மறைந்தவர் சித்ரா. அவர் கதாநாயகியாக நடித்த முதலும் கடைசியுமான படம்!

கால் சென்டரில் பணியாற்றும் சித்ரா கஸ்டமர்களுக்கு போன் செய்வதன்மூலம் அவர்களின் கஷ்டம் புரிந்து உதவுகிறார். அதன் மூலம் அவருக்கிருக்கும் மன உளைச்சல்களுக்கும் மருந்து போட்டுக் கொள்கிறார். கதையின் சில பகுதிகள் இவ்விதம் தொடர்கிறது.

அடுத்ததாக, சிட்டியில் தொடர்ந்து மர்ம மரணங்கள் நடக்கிறது. அதற்கும் சித்ராவுக்கும் என்ன சம்பந்தம் என்பதில் இருக்கிறது திருப்பம்.

சமூக அவலங்களை மையப்படுத்திய கதைக்களம் அமைத்து இயக்கியிருப்பவர் சபரிஷ். நிச்சயமாய் பாராட்டுக்குரிய முயற்சி!

அழகுத் தோற்றம் அசத்தல் சிரிப்பு என்றே பார்த்தப் பழகிய சித்ராவை அதே இயல்போடும் சற்றே சீரியஸாகவும் காட்டியிருக்கிறார்கள். அந்த சிரிப்பழகி எல்லாவிதத்திலும் கவர்கிறார்.

சித்ராவின் அப்பா ஜீவா ரவி, அம்மா ஸ்ரீரஞ்சனி, தோழி தேவதர்ஷினி, டீம் லீடர் நிழல்கள் ரவி, தடயவியல் துறை அதிகாரி வினோதினி என படத்தில் கதாபாத்திரங்கள் ஏராளம். எவர் நடிப்பிலும் குறையில்லை.

ஹீரோயிஸ கமர்ஷியல் அம்சங்களைத் தவிர்த்திருப்பது தனித்துவம்.

கதைப்படி இயற்கை மரணங்களைப்போல் கொலைகள் நடக்கிறது. அதற்காக அறிவியல் சங்கதிகளைக் கோர்த்திருப்பது விறுவிறுப்பு!

கதையின் திருப்பங்கள் காட்சிகளின் நீளத்தால் சலிப்பு தருகிறது.